போவோமா ஊர்கோலம்.. ’தோழியுடன்’ தனியே காரில் சிக்கிய பாஜக பிரபலம்! நடுரோடுனு கூட பாக்கலையே! என்னா அடி?
லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் இன்னொரு பெண்ணுடன் காரில் தனியாக இருந்த பாஜக தலைவரை அவரது மனைவியும் அந்த பெண்ணின் கணவரும் நடுரோடு என்று கூட பார்க்காமல் செருப்பால் அடித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் திடீரென வெளியாகி பெரும் பரபரப்புகளை ஏற்படுத்துவது வழக்கம். தற்போதுள்ள சூழலில் ஒரு நாள் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டு மீண்டும் விடு திரும்பினால் ஆயிரக்கணக்கான கேமராக்களில் நாம் பதிவாவோம்.
இது ஒரு புறம் என்றால் செல்போன் கேமராக்களில் இருந்து அவ்வளவு சீக்கிரம் யாரும் தப்பிக்க முடியாது. சாமானியராய் இருந்தாலும் யாராக இருந்தாலும் வீடியோக்களில் சிக்கினால் அவ்வளவுதான் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து விடுவார்கள்.

அதிர்ச்சி வீடியோ
தற்போது அந்த வகையிலான ஒரு வீடியோ வெளியாகி பாஜக தலைவர் ஒருவரை மிக கடுமையாக விமர்சித்து வருவது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது. வேறு ஒன்றும் அல்ல உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் தனது காரில் பெண் தோழியுடன் தனியாக இருந்ததை கண்ட அவரது மனைவி இருவரையும் கையும் களவுமாக பிடித்ததோடு இதுவரையும் செருப்பாலேயே அடித்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இருக்கிறது.

பாஜக தலைவர்
மோகித் சோங்கர் என்பவர்தான் இந்த வீடியோவில் இருக்கும் பாஜக தலைவர். இவர் புண்டேல்கண்ட் பகுதியில் பாஜக செயலாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் இவர் பாஜக சார்பில் போட்டியிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவின் மகளிர் பிரிவின் துணைத் தலைவரான பிந்து என்பவர் உடன் மோகித்துக்கு முறையற்ற உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

செருப்பாலேயே அடி
இதுகுறித்து பலமுறை மோகித்தின் மனைவி கண்டித்திருக்கிறார். ஆனாலும் அதனை கண்டு கொள்ளாமல் பிந்துவுடன் பாஜக தலைவரான மோகித் தொடர்ந்து முறையற்ற உறவைத் தொடர்ந்ததோடு தனது காரில் அவரை அழைத்துக்கொண்டு பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி அவரை கையும் களவுமாக பிடிக்க தக்க சமயம் எதிர்பார்த்து காத்திருந்தார். இந்த நிலையில் தான் இன்று அதிகாலையில் மோகித் பிந்துவுடன் தனது காரில் சுற்றித் திரிவதாக தகவல் கிடைத்தது.

போலீசார் விசாரணை
இதையடுத்து அங்கு சென்ற அவரது மனைவி இருவரையும் காரில் வைத்து கையும் களவுமாக பிடித்ததோடு கணவன் என்றும் பாராமல் சட்டையை பிடித்து வெளியே தள்ளி தன் காலில் அணிந்திருந்த செருப்பால் அடித்து துவம்சம் செய்தார். மேலும் அவருடன் இருந்த பாஜக மகளிரணி தலைவி பிந்துவுக்கும் அடி விழுந்தது. இதனை வீடியோ எடுத்து வெளியிட்டவர் வேறு யாருமில்லை பிந்துவின் கணவர் தான். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இது குறித்து பேசிய அப்பகுதி காவல் காவல் அதிகாரிகள் தற்போது வீடியோ குறித்து ஆராய்ந்து வருவதாகவும் முழுமையான விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் எனக் கூறியுள்ளார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications