பழங்குடியின மக்களுடன் தீபாவளி கொண்டாடிய யோகி.. 153 கோடி மதிப்புள்ள திட்டங்களையும் அறிவித்தார்
லக்னோ: தீபாவளி பண்டிகையை ஆதிவாசிகள் எனப்படும் பழங்குடியின மக்களுடன் கொண்டாடிய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவர்களுக்கு ரூபாய் 153 கோடி மதிப்புள்ள நலத்திட்டங்களையும் தீபாவளி பரிசாக அறிவித்தார்.
தீப ஒளி திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையை பழங்குடியின மக்களுடன் கொண்டாடினார். கோரக்பூர் மாவட்டட்தில் உள்ள டின்கோனியா கிராமத்தில் பழங்குடியின மக்களுடன் தீபாவளியை கொண்டாடிய யோகி ஆதித்யாத், அங்குள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் 153 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத் கூறியதாவது:- ஏழை எளிய மக்களுக்கு சிறு வீடுகள் கிடைத்து இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. குடிநீர் வசதி, மின்சார வசதி, மற்றும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் என அனைத்து வசதிகளும் வந்தங்கியா கிரமத்தில் உள்ளன. ஒவ்வொரு ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்து வருகின்றன.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள். ஆனால், இன்று ராமர் கோவில் கட்டப்பட்டு வருவதோடு, கோவில் திறக்கப்படும் தேதியும் உறுதியாகியுள்ளது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை அளிப்பது மட்டும் இன்றி சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவருக்கும் பெருமை அளிக்கக் கூடியது ஆகும்.

பிரதமர் மோடியின் விஷன் திட்டமான 'சப்கா சாத் சப்கா விகாஸ்' படி மத்திய மாநில அரசுகள் பணியாற்றி வருகின்றன" என்றார். பின்னர் அங்குள்ள கிராமத்தில் வேளாண் துறை, வனத்த்துறை, கல்வித்துறை ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கண்காட்சிக்ளையும் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications