சர்வதேச தரத்திற்கு உயர்ந்த உ.பி தயாரிப்புகள்.. சிறு தொழில் வளர்ச்சியில் ஃபுல் போக்கஸ் செய்யும் யோகி
லக்னோ: கலவரங்களுக்கும், வன்முறைக்கும் ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்த உத்தரப் பிரதேசத்தில் தற்போது தரமான தயாரிப்புகள் வெளிவருவதாகவும், இதன் மூலம் உ.பி சர்வதேச அளவில் பெயர் பெற்றுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் ஏற்கெனவே இருந்த டபுள் என்ஜின் அரசு தற்போது ட்ரிபிள் என்ஜின் அரசாக மாறியிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆட்சி காலத்தில் உத்தரப் பிரதேசத்தின் பெருமைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் பாஜக ஆட்சியில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்தின் தனிச்சிறப்பையும் கவனித்து அந்த தனிச்சிறப்புகளை மேலும் மேம்படுத்த முயற்சிகளை மேற்கொண்டோம்.
உதாரணமாக ஹாபூரின் அப்பளம் மிகவும் பேமஸானது. இந்த அப்பளத்தை சர்வதேச சந்ததைக்கு நாங்கள் கொண்டு சென்றோம். அப்பள உற்பத்தியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்தோம். எனவே இந்த அப்பளம் இந்தியா முழுமைக்கும் பேமஸானது. தற்போது வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்த அப்பளத்தை தேடி தேடி வாங்குகின்றனர். எனவே அதிக அளவில் அப்பளம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியதியாகிறது.
இது ஹாபூரில் மக்களுக்கு மறுவாழ்வை அளித்திருக்கிறது. ஆக பாஜக அரசு மக்கள் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. பாஜக பொறுப்பேற்று கடந்த 7 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், வீடுகள், கழிப்பறைகள், ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் மற்றும் ஜன்தன் கணக்குகள் ஆகியவை கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளித்துள்ளன. இந்த ஆண்டு தொடக்தக்தில் நடைபெற்ற உலக முதலீட்டார்ளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
அதேபோல கடந்த மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முக்கிய துறைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது கல்வி துறைதான். பள்ளி கல்வி துறைக்கு மட்டும் சுமார் ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு அடுத்த மூன்று மாதங்களில் அரசு பள்ளிகள் மேம்படுத்தப்படும். அதேபோல மாநிலத்தில் உள்ள 1753 பள்ளிகள் PM SHRI திட்டத்தின் மேம்படுத்தப்பட இருக்கின்றன. கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு மைதானங்கள், கழிவறைகள் என பல்வேறு புதிய கட்டுமாணங்களுக்க இந்த திட்டத்திலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications