“பள்ளி கல்வியை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன!” யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பள்ளி கல்வித்துறையை பலப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் நல்ல பலனை கொடுத்திருப்பதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி அதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று 6 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் மாநிலத்தின் முதலமைச்சராக பதவியில் இருந்தது கிடையாது. அந்த வகையில் யோகி புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

மறுபுறம் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் யோகி தலைமையில் பாஜக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி யோகியின் செல்வாக்கை மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதில் யோகி ஆதித்யநாத் தீவிரம் காட்டி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "இதற்கு முன்னர் இருந்த அரசு மாஃபியாக்களை வளர்த்து அதன் மூலம் ஆட்சியை நடத்திக்கொண்டிருந்தது. ஆனால், தற்போதைய பாஜக அரசு மக்களுக்காக பணியாற்றுகிறது. அதனால்தான் முதலீட்டாளர்களை நமது மாநிலத்திற்கு யோகி கொண்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. ஏனெனில் வழக்கமாக இந்த மாநாடு மும்பை அல்லது டெல்லியில்தான் நடக்கும்.
ஆனால் லக்னோவில் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. இதற்கு யோகிதான் காரணம். முந்தைய ஆட்சியாளர்கள் செய்ய முடியாததை தற்போதைய ஆட்சியில் நிகழ்த்தி முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல யோகி ஆதித்யநாத், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன" என்று கூறியுள்ளனர். இதனைத தொடர்ந்து பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "பள்ளி கல்வி துறையை பலப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளன. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு இந்த மாற்றங்கள் நிச்சயம் வியப்பை ஏற்டுபடுத்தும். மாணவர்களின் நலனில் இந்த அரசு எப்போதும் சமரசம் செய்துகொள்ளாது" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications