உத்தரப் பிரதேசத்தில் புதிய நீர் வழிப்பாதைகள்.. படகு போக்குவரத்தை விரிவுபடுத்த யோகி ஆதித்யநாத் யோசனை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் முழுவதும் வற்றாத நதிகள் ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், இதில் ஏற்கெனவே படகு போக்குவரத்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இதை மேலும் மேம்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து ஏற்கெனவே, மாநிலத்தில் நீர் போக்குவரத்தை விரிவுபடுத்த உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் அமைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசிக்க நடந்த உயர்மட்ட கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பேசிய யோகி ஆதித்யநாத், "மாநிலத்தில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கு மாநிலத்தில் நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதற்கும். உள்நாட்டு நீர்வழிப் பாதைகளில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான வாய்ப்புகளை ஆராய வேண்டும்.

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் மற்றும் அதுபோன்ற மாநில அளவிலான அமைப்புகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, இது தொடர்பான வரைவு முன்மொழிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் நீர் போக்குவரத்தின் விரிவாக்கம் வேகமாக முன்னேறி வருகிறது, மேலும் பிரயாக்ராஜில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துறைமுக நகரமான ஹல்டியா வரை தேசிய நீர்வழி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் புதியதாக உருவாக்கப்படும் ஆணையம் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும்.
மாநிலத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஆணையம் ஒழுங்குபடுத்தும். இந்த ஆணையம் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து தொடர்பான தரவுகளை ஆய்வு செய்து பகுப்பாய்வு செய்யும் மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து, சுற்றுலா, கப்பல் போக்குவரத்து மற்றும் வழிசெலுத்தல் நடவடிக்கைகள் குறித்த அறிவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ளும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications