17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை.. ரூ 8 லட்சத்திற்கு விற்பனை.. மதுரையில் 5 பேர் கைது
மதுரை: மதுரை திருமங்கலத்தில் சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை ரூ.8 லட்சத்திற்கு விற்கப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை பேரையூர் பகுதியை சேர்ந்த 17 வயசு சிறுமி, தவறான உறவால் கர்ப்பம் அடைந்தார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது சிறுமியும் அவரது தாயும் அங்கிருந்து யாரிடமும் கூறாமல் பேரையூர் வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேரையூர் கிராம செவிலியர் காந்திமதிக்கு தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்ற காந்திமதிக்கு குழந்தையை காட்ட மறுத்துள்ளனர்.
இதனால் காந்திமதி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரில் ரூ 8.20 லட்சத்திற்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கியதாக எல்ஐசி ஊழியர் தேஜஸ்வரி உள்ளிட்ட 5 பேரை கைது செய்த போலீஸார் குழந்தையை மீட்டதுடன், இந்த வழக்கில் தொடர்புடைய உசிலம்பட்டியை சேர்ந்த வழக்கறிஞர் தாமரைச் செல்வன் மற்றும் செவிலியர் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications