இது நாய் அல்ல.. சிங்கத்துக்கு நிகரான வலிமை... சிப்பிப்பாறை நாய்களின் அசாத்தியமான திறமையை பாருங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே சிப்பிப்பாறை என்ற பகுதியில் இருந்து இனப்பெருக்கமான சிப்பிப்பாறை நாய்கள் சிங்கத்துக்கு நிகரான வலிமை உள்ளவை என்று நெகிழ்கிறார்கள் நாய் வளர்ப்போர். சிப்பிப்பாறை நாய் ஒன்று மிகப்பெரிய உயரத்திற்கு தாவுகிறது- அதன் அசாத்திய திறமையை பற்றி பார்ப்போம்.

இந்தியாவில் உள்ள நாய்கள் இனங்களில் முக்கியமானவை சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, கன்னி ஆகியவை ஆகும். இந்த நான்கு நாய் இனங்களுமே அதிக மோப்ப சக்தி கொண்டவை. இதில் நாம் பார்க்க போவது சிப்பிப்பாறை நாய் பற்றித்தான். சமூக வலைதளத்தில் சிப்பிப்பாறை நாய் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியாவில் சிப்பிப்பாறை நாய் ஏழு அல்லது 8 அடி உயரமுள்ள கம்பி வேலியை அசால்டாக தாண்டுகிறது. இந்த வீடியோவை கண்ட பலர் மெய்சிலிர்த்து போனார்கள்.

A Chippiparai dog jumps to great heights Check out the amazing skills of Chippiparai dogs

இந்த சிப்பிப்பாறை நாய்கள் மதுரை அருகே சிப்பிப்பாறை என்ற பகுதியில் அந்த பகுதி மன்னர்களால் இனப்பெருக்கம் செய்யப்பட்டவை ஆகும். அந்த காலத்தில் சிப்பிப்பாறை நாய் மூலமாக முயல், மான், பன்றி ஆகியவற்றை தமிழக மக்கள் வேட்டையாடி வந்துள்ளார்கள். இன்றும் தனியாக காட்டில் வசிப்பவர்கள் சிப்பிப்பாறை நாய்களை காவலுக்கு வைத்திருப்பார்கள். தோப்பில் உள்ள வீடுகளில் வசிப்போர் சிப்பிப்பாறை நாய்களை வைத்திருந்தால் தைரியமாக வசிக்கலாம். அந்த அளவிற்கு வலிமையான நாய் சிப்பிப்பாறை .

இந்த நாய் மோப்ப சக்தியிலேயே காட்டுக்குள் பதுங்கியிருக்கும் முயல், பன்றி உள்ளிட்ட உயிரினங்களை குறிவைத்து பிடித்துவிடும். காட்டிற்குள் வரும் ஆடு, மாடு போன்றவற்றை விரட்டிவிடும். சிப்பிப்பாறை நாய் அழுக்குவெள்ளை, சாம்பல், மங்கிய பழுப்பு நிறங்களில் காணப்படும். சிப்பிப்பாறை நாய்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்றால், நெஞ்சுப்பகுதி விரிந்தும், வயிற்றுப்பகுதி இறங்கியும், கால்கள் சற்று நீளமாகவும் அமைந்திருக்கும்.

சிப்பிப்பாறை நாய்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் பார்ப்பதற்கு எலும்பும் தோலுமாக இருக்கும் . மின்னல் வேகத்தில் ஓடக்கூடிய இந்த நாய்கள், வனவிலங்குகளை விரட்ட உதவும். சிப்பிப்பாறை நாய்களை வீட்டில் வளர்த்தால், எலி தொல்லை கண்டிப்பாக இருக்காது. பாம்பு போன்ற கொடிய உயிரினங்கள் வந்தால் நம்மை உஷார் செய்துவிடும். காட்டுப்பகுதியை ஒட்டிய வீடுகளில் வசிப்போர் சிப்பிப்பாறை நாய்களை வளர்க்க அதிக ஆர்வம் காட்டுவார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டத்தில் சிப்பிப்பாறை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த நாய்கள் வீடுகளை விடவும், பெரிய பண்ணைகள், தோட்டங்களில் காவலுக்காக நிறுத்தப்படுகின்றன. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய விலங்கினம் ஆகும்.மனிதர்களிடம் நெருங்கி பழகும் குணம் உடையவை. எஜமான் என்ன சொன்னாலும் செய்துவிடும். தமிழகத்தில் பலரும் விரும்பும் நாய் இனமாக சிப்பிப்பாறை இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+