எதிர் நீச்சல் போட்டு வந்த மதுரை ’சுறா’! சாலை வெள்ளத்தில் சாகசம் செய்த மதுரையன்ஸ்! ரொம்ப ஓவரா போறீங்க
மதுரை : மதுரையில் சாலையில் குளம் போல் தேங்கிய மழை நீரில் நீச்சல் அடிக்கும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தென் தமிழகத்தில் அதிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. சொன்னது போலவே கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள பாண்டி பஜார் பகுதியில் உள்ள சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது.

மதுரையில் மழை
மேலும் மாநகராட்சி 13ஆவது வார்டுக்கு உட்பட்ட ஏஞ்சல்நகர், மணிகண்டன், அங்கயற்கண்ணி தெருக்கள் உள்ளிட்ட வார்டு பகுதிகள் முழுவதிலும் கழிவுநீர் மழைநீரோடு தேங்கி 30நாட்களாக தெருக்களில் வெள்ளம்போல தேங்கியிருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மக்கள் அவதி
மேலும் ஏஞ்சல் நகர் பகுதி முழுவதற்கும் 30நாட்களாக வீடுகளுக்குள் கழிவுநீர் முழங்கால் அளவிற்கு நிரம்பியுள்ளதால் வீடுகளில் வசிக்க முடியாத நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர்.

சாலையில் நீச்சல்
இதில் அப்பகுதி இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்து வரை சாலையில் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் சிறிது நேரத்திற்க்கு மழை பெய்த போதிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி விடுவதால், தொடர்ந்து மழைநீர் அங்குள்ள கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சேதம் ஏற்பட்டு இழப்பு ஏற்படுவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

மக்கள் கோரிக்கை
மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இதனை கண்டித்து இதுபோன்று நீச்சல் அடித்து கண்டனத்தை பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் மதுரையில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications