“பக்கா 420 திருட்டு வேலை.. முதல்வர் விஜய்யே மக்களை ஏமாற்றுகிறார்” - AI வீடியோவால் பாயும் அதிமுக!

Subscribe to Oneindia Tamil

மதுரை: "முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், தமிழக முதல்வர் விஜய்யை பாராட்டுவது போல் போலி ஏஐ வீடியோ வெளியிட்டு தமிழக முதல்வரே ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறார். போலி வீடியோக்கள் மூலம் அதிமுகவை தவெக அபகரிக்க நினைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்" என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் விஜய்யுடன், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளி ஒன்றை தவெகவினர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்தனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, விஜய்யை எம்ஜிஆர் வாழ்த்துவது போன்று அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டிருந்தது.

AIADMK Accuses CM Vijay of Using Fake AI Video of MGR to Mislead People

இந்நிலையில் மதுரையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தவெக செயல்படுத்த முடியாத தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து போலி வீடியோக்கள், இன்ஃப்ளூயன்சர்களை வைத்து போலியான பிம்பத்தை கட்டமைத்து ரூட் மீடியா மூலம் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

இதன் மூலம் மக்களை ஏமாற்றி 34.99 சதவீதம் வாக்குகள் பெற்று தவெக ஆட்சி அமைத்துள்ளது. தற்போது இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பின்பு ஒரு போலி வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், எம்ஜிஆர் விஜய்யை வாழ்த்துவது போலவும், 'அதிமுக தொண்டர்களை பார்த்துக்கொள்ளப்பா' எனச் சொல்வதை போலவும் போலியான ஏஐ வீடியோ வெளியிட்டுள்ளனர்.

எப்படி போலி வீடியோ மூலம் ஆட்சி அமைத்தார்களோ, அதேபோல், போலி வீடியோக்களை தொடர்ந்து பரப்பி மக்களை ஏமாற்றுகின்றனர். எம்ஜிஆருக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு? விஜய் எப்போதாவது எம்ஜிஆரை பார்த்துள்ளாரா? தமிழக முதல்வர் விஜய்யே ஏமாற்றும் வேலையில் ஈடுபடுகிறார். காங்கிரஸ் கட்சியும், திமுகவும், அதிமுகவை அழிக்க நினைத்து தோற்றுவிட்டன.

இரண்டரை ஆண்டான தவெக கட்சி, அதிமுகவை அபகரிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம். மக்கள் தான் நீதிபதிகள். அவர்கள் தான் தீர்ப்பு வழங்க வேண்டும். வெற்றி தோல்வி என்பது ஜனநாயகத்தில் சகஜம். தவெக ஒரு தோல்வி வந்தால் தாக்குப்பிடிக்க முடியாது. அந்தக் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை. அதனால் கட்டமைப்புள்ள அதிமுகவை அபகரிக்க நினைக்கிறது. இந்த வேலையை இதுவரை எந்த முதல்வரும், எந்த தலைவரும் செய்ததில்லை.

பக்கா திருட்டு வேலையை தவெக செய்கிறது. தற்போது போலியான வீடியோவை வெளியிட்டு முதல்வரே இப்படி ஒரு ஃபோர்ஜரி, 420 சீட்டிங் வேலையை செய்யலாமா? இந்த வீடியோ முதலமைச்சருக்கு தெரிந்துதான் வெளியிடப்பட்டதா? அல்லது தெரியாமல் வெளியானதா? இதற்கு அனுமதி பெறப்பட்டதா அல்லது அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டதா?

நான் தான் எம்.ஜி.ஆர் என்கிறார் விஜய். எம்.ஜி.ஆருடைய கால் தூசிக்கு கூட யாரும் இணையாக முடியாது. தொண்டர்கள் இந்த வீடியோவால் மனம் குமுறி வருகிறார்கள். இந்த கீழ்த்தரமான அரசியலை இத்துடன் தவெக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்று செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அதிமுக சீனியர்களை பதவி ஆசைகாட்டி அழைத்தனர், அதிகாரத்தை வைத்து மிரட்டினார்கள், காவல்துறையினரை வைத்து பொய் வழக்கு போட்டனர். தற்போது அதிமுக என்னும் வீட்டிலிருந்து திருடுகின்றனர். அடுத்து எந்த வீட்டில் திருடுவார்களோ எனத் தெரியவில்லை. மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதிமுக மக்களுக்கான கட்சி.

மற்றும் பலர் என்று சொன்ன அதிமுக இடைத்தேர்தலில் 5 சுற்றுவரை தவெகவுக்கு தண்ணீர் காட்டியுள்ளோம். தவெக அதிமுகவை அபகரிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். போலி வீடியோக்கள் மூலம் கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளில் தவெக ஈடுபடக்கூடாது. இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

தேர்தலில் ஒரு தோல்வி வந்தால் அதற்கு பிறகு தவெக தமிழ்நாட்டில் இருக்குமா? மக்களுக்காக போராடுமா? இடைத்தேர்லில் ஒரு ஆளும்கட்சி இவ்வளவு குறைவான வாக்கில் வென்றதே இல்லை. மக்களிடம் இந்த ஆட்சியின் மீது அவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது. தற்போது தலைமைச் செயலகத்தில் சினிமா படப்பிடிப்புபோல் முதல்வர் விஜய் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். நாடு எங்கே போகிறது எனத் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+