"ஆர்பி உதயகுமார் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்.. விரைவில் ஒருங்கிணைந்த அதிமுக" பாயும் எம்எல்ஏ ஐயப்பன்!
மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சிறுபிள்ளைத்தனமாக பேசி வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர் எம்எல்ஏ ஐயப்பன் விமர்சித்துள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுக்குழு வழக்கு செல்லும் என்ற நீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ளது. இதனிடையே இபிஎஸ் ஆதரவாளர்களை இழுக்க ஓபிஎஸ் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.
அதேபோல் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருடனும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நெருக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தொண்டர்கள் மத்தியில் பலத்தை நிரூபிக்க ஓபிஎஸ் தயாராகி வருகிறது.

அதிமுக எம்எல்ஏ ஐயப்பன் கோரிக்கை
இதற்கிடையே இபிஎஸ் ஆதரவாளராக இருந்த உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன், திடீரென ஓபிஎஸ்-க்கு ஆதரவளித்தார். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பணம் கொடுத்து ஆள்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்தார். இந்த நிலையில் மதுரை மாவட்டம் வைகை அணையில் இருந்து 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ஐயப்பன் பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து எம்எல்ஏ ஐயப்பன் கூறுகையில், விவசாய பணிகளுக்காக வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க மனு அளித்தேன். 58ம் கால்வாயில் தண்ணீர் திறப்பதால் 33 கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

ஆர்பி உதயகுமார் மீது விமர்சனம்
பின்னர், திடீரென ஓபிஎஸ்-க்கு ஆதரவாளராக மாறியது ஏன் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நான் 8 வயதில் இருந்து எம்ஜிஆர் உடன் அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். மிட்டாய் கொடுத்து கூட்டி செல்ல நான் ஒன்றும் சிறுபிள்ளை அல்ல. நான் இரட்டை இலையுடன் கட்சிப் பணியாற்றிய போது ஆர்பி உதயகுமார் பிறக்கவேயில்லை. சிறுபிள்ளைத்தனமாக ஆர்பி உதயகுமார் பேசி வருகிறார்.

ஒருங்கிணைந்த அதிமுக
அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒன்றிணைய ஓபிஎஸ் கட்டளைப்படி நாங்கள் யாரையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். எதிர் வரும் தேர்தல்களில் ஒருங்கிணைந்த அதிமுகவாக தேர்தலை சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications