செல்லூர் ராஜூ போனில் அழைத்தார்.. எதிரெதிர் அரசியல் முகாம்களில் இருந்தாலும்.. நெகிழ்ந்த மதுரை எம்.பி!
மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசனை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.
மதுரை வண்டியூரில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் வெகு விமர்சையாக தெப்பக்குள திருவிழா நடைபெறும். தை மாத பௌர்ணமி நாளன்று தெப்பக்குளம் மாரியம்மன் திருவிழா நடைபெறும். அப்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு, தெப்பக்குளத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திருவிழா தொடங்கி, ஜனவரி 25ஆம் தேதி விழா உற்சவமான தெப்பக்குள தேர் இழுக்கும் நிகழ்வு நடைபெற்று முடிந்தது. திருவிழாவை முன்னிட்டு தெப்பக்குளத்தை சுற்றிலும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்த வண்ண விளக்குகளில் தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் கூடுதல் அழகுடன் மிளிர்ந்தது.
மேலும், மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தெப்பக்குளம் பகுதியில் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இதில் ஒளி வெள்ளத்தில் மின்னியது தெப்பக்குளம். இதனால் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலை காணக் குவிந்து, கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைத்துள்ளது குறித்து சு.வெங்கடேசனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பாராட்டு தெரிவித்துள்ளார். இதனை, தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து நன்றி தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன். எதிர் கட்சி எம்.பியை அதிமுக முன்னாள் அமைச்சர் பாராட்டியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "நேற்று மாலை அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் தொலைபேசியில் அழைத்தார். வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றி உயர்மின் கோபுரம் அமைந்துள்ளது மிகச் சிறப்பாக இருக்கிறது என்று சொல்லி வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்தேன். எதிரெதிர் அரசியலில் முகாம்களில் இருந்தாலும், நல்லதை பாராட்டும் அரசியல் நெறியை என்றும் காப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications