செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி.. அவருக்கு அடையாளம் கொடுத்ததே ஜெயலலிதா தான்.. செல்லூர் ராஜூ!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்று செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி என்றும், அவர் பேசுவதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். செந்தில் பாலாஜிக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா தான் என்று கூறிய செல்லூர் ராஜூ, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மாற்றத்தை கொடுப்பார் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளுக்கு நாள் பரபரப்பை அதிகரித்து வருகிறது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மொத்தமாக களமிறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கில் வாக்கு சேகரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையல்ல. அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோட்டை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் பெரும் வெற்றியை பெறுவார் என்று தெரிவித்தார்.

பேனா நினைவு சின்னம்

பேனா நினைவு சின்னம்

இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு கூறுகையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் விவகாரத்தில் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்கள். அதேபோல் கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் யாரும் ஏற்பை தெரிவிக்கவில்லை. இதனால் கடலில் நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி பற்றி செல்லூர் ராஜூ

செந்தில் பாலாஜி பற்றி செல்லூர் ராஜூ

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்த போது, கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை என்று கூறிய செந்தில் பாலாஜியின் கருத்து பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அமைச்சர் செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார். செந்தில் பாலாஜி பல கட்சிக்கு சென்று வந்தவர்.

பச்சோந்தி

பச்சோந்தி

ஆனால் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா தான். திமுக குடும்பத்தை பற்றி தர குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி. அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும். மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொடுப்பார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

திமுக அரசு பொய்யாக பேசி ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன், கேஸ் மானியம் தருகிறேன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டனர். இதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள் தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+