எய்ம்ஸ்...ஒரு செங்கலை வைத்து திமுக அரசியல் செய்தது ஏன் என்பது புரிகிறதா? - வானதி சீனிவாசன்
மதுரை: ஒற்றைச் செங்கலை வைத்து அரசியல் செய்தவர்கள் ஏன் இன்னும் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
மதுரை எய்ம்ஸ் உருவாக ஜப்பான் நிதி தொடர்ச்சியாக வரவேண்டும். இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார் என்றும் தெரிவித்தார்.
வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம மதுரை வந்தார் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 12 ஆம் தேதி மருத்துவக்கல்லூரி திறந்து வைப்பதற்காக தான் பிரதமர் மோடி தமிழகம் வருவதாக கூறினார். அரசு விழாவிற்கு வருகை தரும்போது பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக மட்டுமே தற்போது முடிவாகியுள்ளதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மோடிக்கு வரவேற்பு தரவேண்டும்
தமிழகத்திற்குரிய திட்டங்களை பிரதமர் தொடக்கி வைக்க வருகின்ற போது அதை தமிழகத்தின் சார்பாக அனைவரும் வரவேற்க வேண்டும். கடந்த காலத்தில் திமுகவினர் ஆயுத தளவாட கண்காட்சியை பிரதமர் திறந்து வைக்க வரும்போது GoBackModi எனக் கூறினர். ஆனால், அந்தத் திட்டத்தின் மூலமாக ரூ.2000 கோடி முதலீடு நடந்திருப்பதாக சட்டசபையில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

2000 கோடி ரூபாய் முதலீடு
பிரதமரை நீங்கள் திரும்பிப் போ என்று கூறினாலும் கூட அந்தத் திட்டத்தால் 2000 கோடி ரூபாய் முதலீடு தமிழகத்திற்கு இன்று கிடைத்துள்ளது. இவையெல்லாம் திமுகவினர் இன்று சரியாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

பயன்படுத்தாத தமிழகம்
தமிழகத்தை மத்திய அரசு மாற்றான் தாய் பிள்ளையாக பார்க்கிறது என்று எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன், எந்தெந்த விதத்தில் மாற்றான் தாய் பிள்ளைகளாக பார்க்கிறது என்று அவர்களைபுள்ளிவிபரம் கொடுக்கச் சொல்லுங்கள். உண்மையில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் இரண்டு மூன்று திட்டங்கள் அமல்படுத்த முடியாத நிலையே உள்ளதாக கூறிப்பிட்டார்.
மத்திய அரசு நிதி கொடுத்தால் கூட அதனை சரிவர பயன்படுத்த முடியாத இடத்தில் தமிழகம் இருப்பது வேதனைக்குரியது என்றும் தெரிவித்தார்.

எய்ம்ஸ் தாமதம் ஏன்
தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தொடர்ச்சியாக நிதி உதவி கிடைத்தால் தான் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது. கொரோனா சூழ்நிலை காரணமாக ஜப்பானில் இருந்து ஒரு குழு இங்கு வந்து ஆய்வு கொள்வதற்கு தாமதமாகிறது. இது தெரிந்திருந்தும் எய்ம்ஸை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக கூறிவிட்டு உதயநிதி ஸ்டாலின் செங்கலை கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

7 மாதம் ஆகிவிட்டது
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு எய்ம்ஸ் கட்டுமானப் பணியை துவக்கி விட்டார்களா? என்று கேட்ட வானதி சீனிவாசன், 7 மாத காலமாகியும் ஒற்றைச் செங்கலை கையில் வைத்து ஏன் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்? என்றார். இவர்கள் அரசியலுக்காக ஒற்றைச் செங்கலை வைத்து மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பது இப்போது புரிகிறதா எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications