அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) பெயரில் வைரலாகும் போட்டோ- இதெல்லாம் நிஜமா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: நடிகர் அஜித் பெயரில் அரசியல் கட்சி ஒன்றை மதுரை நபர் தொடங்கியிருப்பதாக ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது உண்மையான படமா? இல்லை பரபரப்புக்காக கிளப்பிவிடப்பட்ட படமா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

அஜித் திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) என்ற பெயரில் மதுரையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. மதுரையில் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சுவரொட்டியில் அஜித் மற்றும் எம்ஜிஆர் படங்கள் இடம்பெற்றுள்ளன.

AjithDMK Photo goes on viral in social media

ரைட் சுரேஷ் என்பவர் பெயரில் போட்டோவுடன் அச்சிடப்பட்ட அதில், மதுரை மாநகர் மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இது, சுவற்றில் ஒட்டப்பட்ட சுவரொட்டியாக தெரியவில்லை.

கணிணியில் வடிவமைக்கப்பட்ட படத்தை அப்படியே ஊடகங்களுக்கு அனுப்பி வைத்ததாகவே தெரிகிறது. இந்த படத்தின் உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை.

நடிகர் அஜித்தைப் பொறுத்தவரையில் அரசியல் சர்ச்சைகளில் சிக்காதவர். அண்மையில் கூட சில அரசியல் கட்சித் தலைவர் அஜித்தும் அரசியலுக்கு வரலாம் என கூறியிருந்த நிலையில் இப்படி ஒரு போட்டோ வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+