மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைச்சர் மைக்கில் அழைத்தும்.. பரிசு பெற மறுத்த இளம்பெண்.. என்ன காரணம்?

Google Oneindia Tamil News

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் நமது கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன.

Recommended Video

    அவனியாபுரத்தில் கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு

    மேலும் நமது வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் நடத்தபடும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்புபெற்றவை.

    Palamedu Jallikattu: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.. கொண்டாட்டத்தில் மதுரை Palamedu Jallikattu: உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.. கொண்டாட்டத்தில் மதுரை

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

    நேற்று புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஜல்லிக்கட்டில் ஆண்டுதோறும் தனது காளைகளை அவிழ்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் யோகதர்ஷினி. பள்ளியில் படிக்கும் இவர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து அதனை எதிர்த்து தமிழகமே திரண்டபோது ஜல்லிக்கட்டின் மீது ஆர்வம் கொண்டார்.

     வீர தமிழச்சி யோகயோகதர்ஷினி

    வீர தமிழச்சி யோகயோகதர்ஷினி

    இளம்பெண்ணின் தந்தையும், அண்ணனும் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை பராமரிக்கும்போது தனக்கும் ஜல்லிக்கட்டில் ஆர்வம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.இந்த நிலையில் நேற்று நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறங்கினார் யோகயோகதர்ஷினி. அப்போது அவரது காளை பிடிமாடாக போனதாக கூறப்படுகிறது.

    மைக்கில் அழைத்த அமைச்சர் மூர்த்தி

    மைக்கில் அழைத்த அமைச்சர் மூர்த்தி

    அப்போது விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு வழங்க அழைத்தனர். ஆனால் இதனை வாங்க மறுத்து யோகயோகதர்ஷினி.நடையை கட்டினார். தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, அவரை பரிசு வாங்கிச் செல்லும்படி மைக்கில் கூறினார். ஆனாலும் பரிசினை வாங்காமல் யோகயோகதர்ஷினி சென்று விட்டார்.

    காரணம் என்ன?

    காரணம் என்ன?

    இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கடந்த முறை இதேபோன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனது காளை களமிறங்கியபோது, தனக்கு விழாக் குழுவினர் வழங்க அழைத்தபோது, அதனைப் பெற மறுத்து காளையோடு நடையைக் கட்டினார். அப்போது வருவாய்த்துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார், மைக்கில் யோகதர்ஷினியை பரிசு வழங்குவதற்காக அழைத்தபோதும் அதனை ஒரு பொருட்டாகக் கூட கருதவில்லை. தனது மாடு தொடர்ந்து பிடிமாடாகி வருவதால் இதன் காரணமாக பரிசு கூட வேண்டாம் என்று அந்த இளம்பெண் ஒதுங்கி வருகிறார்.

    English summary
    Tamil Nadu Minister Murthy offered to give a special gift but the girl refused to buy it In Avanyapuram Jallikattu The incident is going viral on the social website
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X