Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரத் பந்த்.. தமிழகம் முழுவதும் 33% பேருந்துகள் மட்டுமே இயக்கம்.. மாணவர்கள், பயணிகள் கடும் அவதி

தமிழகம் முழுவதும் 33 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகளும் வேலைக்கு செல்வோரும் பள்ளி மாணவ மாணவிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தொழிற்சங்கங்கள் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 33% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் வேலைக்கு செல்பவர்களும் வெளியூர் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Recommended Video

    இன்று முதல் 2 நாள் ஸ்டிரைக்.. பஸ் ஓடாது... பொதுமக்கள் கடும் அவதி!

    தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தேசிய பணமாக்கும் கொள்கை மூலம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசிற்கு தங்களது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நடத்தப்படும் இந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு ஆதரவு வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து இருந்தார். இந்த வேலை நிறுத்தத்துக்கு மாநில தொழிற்சங்கங்களும் முழு ஆதரவு அளித்துள்ளன திமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களும் ஆதரவு அளித்துள்ளது.

     போக்குவரத்து துறை எச்சரிக்கை

    போக்குவரத்து துறை எச்சரிக்கை

    மார்ச் 28 மற்றும் 29 ல் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும்; பணிக்கு வருகை தரவில்லை எனில் ஆப்செண்ட் மார்க் செய்யப்பட்டு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் எனவும் போக்குவரத்துத்துறை கூறியிருந்தது.

    67% பேருந்துகள் இயங்கவில்லை

    67% பேருந்துகள் இயங்கவில்லை

    போக்குவரத்துறையின் எச்சரிக்கையையும் மீறி இன்று பேருந்துகள் இயக்கப்படவில்லை. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயங்குகின்றன. காலையில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பேருந்துகள் இயக்குவதால் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் ஓடுகின்றன.

    5023 பஸ்கள் மட்டுமே இயக்கம்

    5023 பஸ்கள் மட்டுமே இயக்கம்

    தமிழகத்தில் வேலைநிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவில்லை; போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி இயங்க வேண்டிய 15,335 பேருந்துகளில் 5,023 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 33% பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

    சென்னையின் முக்கிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றனர் அரசு பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 10 சதவிகித பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    ஆட்டோக்கள் கட்டணக்கொள்ளை

    ஆட்டோக்கள் கட்டணக்கொள்ளை

    பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் அனைவரும் ஆட்டோக்களையும் ஷேர் ஆட்டோக்களையும் மட்டுமே நம்பியுள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். வேலைக்கு செல்வோரும் பள்ளிக்கு செல்வோரும் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. இந்த வேலை நிறுத்தம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் சிரமம்

    ஈரோடு மாவட்டத்தில் சிரமம்

    சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து பணிமனைக்கு 450க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வராததால் 90 பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதில் தமிழகம் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இயங்கி வந்த 11 அரசு பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் பணிமனையில் வரிசையாக அணிவகுத்து நின்றன. அதிமுக தொழிற்சங்க ஓட்டுனர்கள் பேருந்து இயக்க முற்பட்டதால் பிற சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பேருந்துகள் இல்லாததால் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன.

    தனியார் பேருந்துகளில் கூட்டம்

    தனியார் பேருந்துகளில் கூட்டம்

    வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு செல்லும் தொழிலாளர்கள் பேருந்துகள் இன்றி சிரமத்துக்குள்ளாகினர். தனியார் பேருந்துகள் வழக்கம்போல இயங்கியதால் அதில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழக பேருந்துகள் இயக்கபடாததால் கர்நாடக செல்லும் பயணிகள் பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். 2 மணி நேர இடைவெளிக்கு பின் வந்த கர்நாடக அரசு பேருந்தில் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்றனர். பயணிகள் ஆட்டோக்களும் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

    நெல்லையில் பயணிகள் அவதி

    நெல்லையில் பயணிகள் அவதி

    நெல்லை மாவட்டத்தில் காலை முதல் 30 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது, ஆட்டோக்கள் ஒடவில்லை குறைந்த அளவிலான அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் மட்டுமே இயக்கப்படுவதால் பேருந்துகளில் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை பல இடங்களில் மறியல் போராட்டத்தில் தொழில் சங்கத்தினர் ஈடுபட்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+