மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’சிண்ட்ரெல்லா’ மீது தப்பில்லை..சரவணன் தான் காரணம்! அவரை தூக்குங்க! செக் வைத்த ‘தாமரை’! பறந்த புகார்!

Google Oneindia Tamil News

மதுரை : மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கு முன்னாள் பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் தான் காரணம் எனவும் அவரை கைது செய்ய வேண்டுமென மதுரை மாநகர காவல் ஆணையாளிடம் பாஜகவினர் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Recommended Video

    PTR கார் மேல BJPயினர் வீசியது பத்தி உங்க கருத்து என்ன? | Public Opinion

    காஷ்மீரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர் லெட்சுமணனின் உடல் கடந்த 13ஆம் தேதி மதுரை விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    ராணுவ வீரரின் உடலுக்கு தமிழக அரசு சார்பில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தினார். அந்தப் பகுதியில் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாஜகவினரும் காத்திருந்தனர்.

    சரவணன் பாஜகவில் இருந்து விலக இது மட்டும் காரணமல்ல.. ஏற்கனவே.. உடைத்துப் பேசிய நயினார் நாகேந்திரன்! சரவணன் பாஜகவில் இருந்து விலக இது மட்டும் காரணமல்ல.. ஏற்கனவே.. உடைத்துப் பேசிய நயினார் நாகேந்திரன்!

    பழனிவேல் தியாகராஜன்

    பழனிவேல் தியாகராஜன்

    இந்நிலையில் அரசு நிகழ்ச்சிக்கு இவர்கள் ஏன் கூட்டமாக வந்தனர்? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால், அமைச்சருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்து பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அப்போது பாஜகவினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     கார் மீது காலணி வீச்சு

    கார் மீது காலணி வீச்சு

    பின்னர் ராணுவ வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, திரும்பிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணியை வீசினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், காவல்துறையினர், அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தியதைத் தொடர்ந்து அமைச்சரின் கார் அங்கிருந்து சென்றது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அன்று இரவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.

     பாஜகவினர் கைது

    பாஜகவினர் கைது


    இந்நிலையில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்த நிலையில், காலணி வீசப்பட்ட சம்பவத்துக்கு யார் காரணம் என இரு தரப்பும் மாறி புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணியை வீசியதாக பெண்கள் உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது.

    சரவணன் தான் காரணம்

    சரவணன் தான் காரணம்

    அதாவது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கு முன்னாள் பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் தான் காரணம் எனவும் அவரை கைது செய்ய வேண்டுமென மதுரை மாநகர காவல் ஆணையாளிடம் பாஜகவினர் புகார் கொடுத்துள்ளனர். மதுரை மாநகர காவல் துறை ஆணையர் செந்தில்குமார் இடம் மதுரை மாநகர் மாவட்ட தலைவராக அண்ணாமலையால் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள சுசீந்திரன் தலைமையில் இன்று 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் புகார் அளித்தனர்.

    கமிஷனரிடம் புகார்

    கமிஷனரிடம் புகார்

    அந்த புகாரில் 'ராணுவ வீரரின் உடலுக்கு அனுமதி செலுத்திய கூடி இருந்த போதுப்நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக அவரை பார்த்து இவர்களை யார் அனுமதித்தது. இங்கு வர என்ன தகுதி உள்ளது என கூறியதால் பாஜகவினர் உடனடியாக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கூறியதாகவும், அப்போது கட்சியினர் மாண்புடன் நடந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால் டாக்டர் சரவணன் மாண்பை மீறி நிதி அமைச்சரின் காரின் மீது காலணி வீசும் சம்பவத்திற்கு தூண்டுதலாக இருந்ததாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும்' என புகார் மனுவில் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    English summary
    BJP complains against former BJP madurai district president Dr Saravanan BJP has complained to the Madurai Metropolitan Police Commissioner that former BJP district president Dr. Saravanan was responsible for the incident of throwing a shoe at Finance Minister PDR Palanivel Thiagarajan's car ; நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய சம்பவத்துக்கு முன்னாள் பாஜக மாவட்ட தலைவரான டாக்டர் சரவணன் தான் காரணம் என மதுரை மாநகர காவல் ஆணையாளிடம் பாஜகவினர் புகார்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X