சர்கார் பட டிக்கெட் அதிக ரேட்.. தியேட்டர் லைசென்ஸ் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி
Recommended Video

மதுரை: மதுரையில் சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் சில தியேட்டர்களில் சர்கார் திரைப்பட டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.1000 என்ற அளவில் இருப்பதாக உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த ஹைகோர்ட் கிளை, சர்கார் படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும். கட்டணத்தை கண்காணித்து, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்கார் படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம் என்று உத்தரவிட்டது.
மகேந்திரன் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications