விநாயகர் ஊர்வலம் நடத்தப் போறீங்களா? இந்த நிபந்தனைகள் முக்கியம்! அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!
மதுரை : விநாயகர் ஊர்வலத்தில் எந்தவிதமான ஆபாச நடனமோ , பேச்சோ இருக்கக்கூடாது உள்ளிட்ட விதிகளுடன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கவும், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தங்கள் ஊரில் விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்டம் புழுதிபட்டியை சேர்ந்த சந்திரசேகரன் என்பர் உயர்நீ திமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, புழுதிப்பட்டி சத்திரம் பீரான்பட்டி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுதபானி திருக்கோயில் அருகே விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதற்கும், வைக்கப்பட்ட சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இதே போன்று மதுரை , தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் தன்மையை பொறுத்து, தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் கீழ் கண்ட நிபந்தனைகளை களுடன் அனுமதி வழங்க உத்தரவிட்டார்.

நிபந்தனைகளின் விவரம் :
* விநாயகர் ஊர்வலத்தி ன் போது பங்கேற்பாளர்கள் எவராலும் எந்தவிதமான ஆபாச நடனமோ , பேச்சோ இருக்கக்கூடாது.
*எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிட்டு நடனம் அல்லது பாடல்கள் எதுவும் இசைக்கக்கூடாது,
*எந்த அரசியல் கட்சிக்கும் அல்லது மதத் தலைவருக்கும் ஆதரவாக ஃப்ளெக்ஸ் போர்டுகள் அமைக்கக் கூடாது
*மதம் அல்லது மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் இருக்க கூடாது .
*விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பங்கேற்பவர்கள் எந்தவிதமான போதை பொருட்களையோ மதுபானங்களையோ உட்கொள்ளக்கூடாது.
* விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் , மனுதாரர் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் பொறுப்பாவார்கள்
*விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினால், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுத்து, அத்தகைய திருவிழாவை நிறுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு சுதந்திரம் உண்டு;.
இந்த நிபந்தனைகளுடன் உரிய அனுமதி வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications