விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!
மதுரை: தவெக தலைவர் விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். இந்த சட்டசபைத் தேர்தல் விஜய்க்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுக்கும் என்று கூறியுள்ள அமீர், திமுக மீதான வெறுப்பு மட்டும் அரசியல் ஆகாது என்றும், திமுகவை தீய சக்தி என்று சொல்லிவிட்டால், அது தீய சக்தியாக மாறாது என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கும் நிலையில், தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். ஆளும் கட்சியான திமுகவை தொடர்ச்சியாக விஜய் அட்டாக் செய்து வருகிறார். அதேபோல் பாஜகவை மென்மையான போக்குடன் அணுகி வருகிறார்.

இருந்தாலும் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆதரவு அதிகளவில் இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்குகளை விஜய் அறுவடை செய்வார் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் அரசியல் தொடர்பாக இயக்குநர் அமீர் பேசுகையில், நாம் எல்லாவற்றையும் மிகைப்படுத்துகிறோம். அதையே விஜய்யும் நம்புகிறார்.
விஜய் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர் பின் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் திரள்கிறார்கள். அந்த இளைஞர்கள் சக்தியை விஜய் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். ஆனால் விஜய் இதுவரை அப்படி எதையும் செய்யவில்லை. இந்த சட்டசபைத் தேர்தலில் விஜய் ஆட்டக்காரர் தான். அதனை ஏற்க எந்த தயக்கமும் இல்லை.
ஆனால் விஜய்யுடன் இருக்கும் அரசியல்வாதிகள் அவரை சரியான வழியில் அழைத்து செல்லவில்லை. தமிழ்நாட்டிற்கான தேவை என்ன? அவர் எந்த வழியில் செல்லப் போகிறார்? அவருக்கு பின் இருக்கும் இளைஞர்களை எப்படி வழிநடத்த போகிறார்? அவர்களை அரசியல்மயப்படுத்துவது எப்படி என்ற எந்த திட்டமும் அவரிடம் இல்லை. இருந்தாலும் எந்த சிந்தனையும் இல்லாமல் ஒரு கூட்டம் அவர் பின்னால் இருக்கிறது.
அதுதான் மிகப்பெரிய கொடுமை. விஜய்யின் குரலுக்கும், பார்வைக்கும் அந்த கூட்டம் கட்டுப்படுகிறது. ஆனால் அவர்களை அரசியல்மயப்படுத்த எந்த யோசனையும் விஜய்யிடம் இல்லை. தவெகவில் 2ஆம் கட்ட தலைவர்களே இல்லை. விஜய்யை காட்சிப்பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள். திமுக மீதான வெறுப்பு மட்டுமே அரசியல் ஆகாது.
தீய சக்தி திமுக என்று சொல்லிவிட்டால், அது தீய சக்தியாக ஆகாது. விஜய் இந்த தேர்தலுக்கு பின் நிறையப் பாடம் கற்றுக் கொள்வார். அவரின் கட்சியில் மாற்றங்கள் வரும். உதயநிதியிடம் தொடக்கத்தில் இருந்ததை விட நிறைய பக்குவமும், முதிர்ச்சியும் வந்திருக்கிறது. இப்போது உதயநிதியை கடந்து அந்தக் கட்சிக்கு அடுத்த தலைமைக்கு வேறு மாற்றே இல்லை.
இதனை வாரிசு அரசியலில் சுருக்கிட முடியாது. விஜய்யால் சலசலப்பை மட்டுமே உண்டாக்க முடிகிறது. விஜய்க்கு அனைத்து தரப்பிலும் ஆதரவு இருக்கிறது. ஆனால் அதனை அரசியலில் மிகப்பெரிய சக்தியாக மாற்ற முடியுமா என்பதை தேர்தல் முடிவுகளில் தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடியில் 'திக் திக்'.. மாயமான த.வெ.க வேட்பாளர்.. பாத்ரூம் போனவர் ஆப்சென்ட்.. எடப்பாடிக்கு லக்! -
விஜய் அறிவித்த 2 பேர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணல.. கடைசி நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
பெரம்பூர், திருச்சி கிழக்கு, 2 தொகுதிகளிலும் விஜய்யின் வேட்புமனு ஏற்பு! பாமக எதிர்ப்பால் 30 நிமிடம் கெடு! -
நான் அடிச்சா தாங்க மாட்ட.. கெத்தாக இறங்கிய திரிஷா.. ஓஹோ விஷயம் இது தானா? போட்டி அவங்க கூடவா? -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
விஜய் பற்றி.. ஒரு வார்த்தை சொல்லாத உதயநிதி.. செமயான ஸ்கெட்ச்.. இதை தவெக எதிர்பார்க்கலையே! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
“சீமானுக்காக தவெக தொண்டர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் ஓட்டு கேட்டனர்” CTR நிர்மல்குமார் சொன்ன சீக்ரெட்! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
"எழுத்து பிழை".. சிதம்பரம் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.. மாற்று வேட்பாளராகும் தந்தை -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன? -
Edappadi: வேட்புமனு தள்ளுபடிக்குப் பின் மாயமான தவெக அருண்குமார்… கடத்தலா? பரபரப்பு புகார்!












Click it and Unblock the Notifications