மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு ஆதரவாக 24 விருப்ப மனுக்கள்.. மாணிக்கம் தாகூரை சூடேற்றும் திமுக!
மதுரை: மதுரை வடக்கு தொகுதியில் திமுகவின் சிட்டிங் எம்எல்ஏ தளபதிக்கு ஆதரவாக 24 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலமாக மதுரை வடக்கு தொகுதியை மையமாக வைத்து பேசி வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுகவினர் பணிகளை மேற்கொண்டு வருவதாக பார்க்கப்படுகிறது.
ஒரு வாரத்திற்கு முன்பு வரை திமுகவிடம் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் கட்சியினர் பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் வம்பிழுத்து வந்தனர். இதனால் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ தளபதி, காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்க கூட வலுவில்லை என்று கொந்தளித்தார்.

இதையடுத்து மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் கட்சிக்கு தன்மானமே முக்கியம் என்று பேசத் தொடங்கினார். இதனால் சட்டசபைத் தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும்.. இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நேரில் சென்று வலியுறுத்துவேன் என்று மாணிக்கம் தாகூர் கொந்தளித்தார்.
அதுமட்டுமல்லாமல் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்களிப்பீர் என்று போஸ்டர் ஒட்டப்பட்டது. இது திமுகவினரை கொந்தளிக்க செய்தது. ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் தளபதி தான் போட்டியிடுவார் என்று திமுகவினர் தீர்மானமாக கூறி வந்தனர். இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பாக போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரை வடக்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ-வான தளபதி மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தளபதிக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்கள் 24 பேரும் மதுரை வடக்கு தொகுதியில் அவரே போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு கொடுத்துள்ளனர். இதனால் திமுகவினரின் நடவடிக்கை காங்கிரஸ் கட்சியை சீண்டும் வகையில் அமைந்துள்ளது.
இதனிடையே மாணிக்கம் தாகூர் தனது மாமனாருக்காக மதுரை வடக்கு தொகுதியை கேட்டு வந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மதுரையில் ஒரு தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டு வரும் சூழலில், கடந்த முறையை போல் மீண்டும் மேலூர் தொகுதியை திமுக தள்ளிவிடும் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு












Click it and Unblock the Notifications