திமுக பொதுக்குழுவில் முதல் தீர்மானம்.. ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாட முடிவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாட திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக கொண்டாடும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

DMK Passes Resolution to Celebrate Karunanidhi s Birthday on June 3 as Semmozhi Day

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி செம்மொழி நாள் விழாவாக கொண்டாடப்படும் என்று அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி செம்மொழி நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் இன்று மதுரையில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. தீர்மானங்களை திமுக நிர்வாகிகள் வாசித்து வருகின்றனர்.

அந்தவகையில், திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3 ஆம் தேதியை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+