நீதிபதி சுவாமிநாதன் உத்தரவால் தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு - தமிழக அரசு பரபரப்பு வாதம்
சென்னை: நீதிபதி சுவாமிநாதன் உத்தரவால் தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு அடைந்து என்று உள்ளது தமிழக அரசு பரபரப்பு வாதம் வைத்துள்ளது. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கு பின்னணி
நேற்று திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே, எப்போதும் போல கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையீடு செய்தார். நேற்று மாலை இந்த வழக்கு அவசரமாக விசாரிக்கப்பட்டது. நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்று கூறியும், தீபத்தூணில் விளக்கு ஏற்றாத காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர், தடுப்புகளை உடைத்துச் சென்றனர். ஆனால் போலீஸ் அவர்களை அனுமதிக்காத நிலையில் CISF வீரர்களுடன் செல்லுமாறு மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டார் இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று CISF வீரர்களை அழைத்துக்கொண்டு பல்வேறு இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வந்தனர். ஆனால் அவர்களை அனுமதிக்காத போலீஸ் அதிகாரிகள் We're not allowing...We'll face the consequences என்று குறிப்பிட்டனர்.
தமிழக அரசு வழக்கு
தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிற்கு எதிராக நேற்று தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று தஉயர்நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரணையை செய்து வருகிறது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இதில் , தமிழ்நாட்டின் நல்லிணக்கம் பாதிப்பு அடைந்து என்று உள்ளது தமிழக அரசு பரபரப்பு வாதம் வைத்துள்ளது. எதையுமே கருத்தில் கொள்ளாமல் நீதிபதி பிறப்பித்த உத்தரவால்தான் இந்த சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
மனுதாரர் 10 நபர்களோடு இணைந்து தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஜி.எஸ்.சுவாமிநாதன். மனுதாரர் பெரும் கூட்டத்தோடு சென்று சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளார். அவர் மீதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட வேண்டும்.
பேரிகார்டுகள் உடைக்கப்பட்டுள்ளன, காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மதப்பிரச்னை ஏற்படும் நிலை உருவானது. உயர்நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வழங்குவதே CISF-ன் பணி, அவர்களின் அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே, அதைத்தாண்டி அல்ல.
இந்த விவகாரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அளவிற்கு மனுதாரர் செயல்பட்டு உள்ளார், அச்சப்பட்டது போலவே இதில் நடந்துவிட்டது. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை என்று கூறி அவமதிப்பு வழக்கு தொடுத்துவிட்டது, உடனே அதில் மாற்று உத்தரவு பிறப்பிக்க முடியாது.
எங்களிடம் விசாரிக்கலாம், விளக்கம் கேட்கலாம். நேற்று எப்படி உடனே மாற்று உத்தரவு பிறப்பித்தார். CISF படையுடன் செல்ல எப்படி உத்தரவு பிறப்பித்தார், என்று தமிழக அரசு வாதம் வைத்துள்ளது.
-
“அண்ணாமலைக்கும், அவர் பின்னால் போன ஆட்டு மந்தைக்கும் பாஜகவின் கொள்கை புரியவில்லை” - வேலூர் இப்ராஹிம் -
தமாகாவை கரைத்த பாஜக.. என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்? ஜிகே வாசன் முடிவில் பின்னணி -
பாஜக கூட்டணிக்கு ‘குட்பை'.. வெளியேறிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி - ஜிகே வாசன் அறிவிப்பு -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
கைவிட்ட பாஜக.. மம்தாவையும் பகைத்து கொண்ட திரிணாமுல் தலைவர்கள்.. இடியாப்ப சிக்கல்! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications