காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக.. விஜய்யின் கத்தி பட டயலாக்கை பேசிய எடப்பாடி பழனிசாமி!
மதுரை: என்டிஏ கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க தென் மாவட்ட மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக காற்றில் கூட ஊழல் செய்த கட்சி என்று விஜய் பேசிய டயலாக்கை பேசி விமர்சித்துள்ளார்.
மதுரையில் என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணியில் உள்ள அத்தனை தலைவர்களும் பங்கேற்றனர். அதில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், நம் கூட்டணி 201 தொகுதிகளிலும் வென்று அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும்.

234 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்கள் வென்று, அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தேனிக்களைப் போல, எறும்புகளைப் போல் உழைக்க வேண்டும். நமக்கு எதிரான உள்ள கூட்டணி இதுவரை தேர்தல் பிரச்சாரத்தை கூட தொடங்கவில்லை. தமிழ்நாட்டிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை மோடி ஒதுக்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டிற்கு என்ன நிதி கொடுத்தீர்கள்? என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள் என்பதை முதல்வர் ஸ்டாலினால் சொல்ல முடியுமா? 15 ஆண்டு கால மத்திய ஆட்சியில் பங்கு வகித்த திமுகவால் தமிழ்நாட்டிற்கு என்ன கிடைத்தது? காற்றில் கூட 2ஜி மூலமாக ஊழல் செய்த கட்சி தான் திமுக.. மத்தியில் அமைச்சரவையில் இருந்தாலும் கூட ஊழல் செய்துள்ளது.
ஊழல் காரணமாக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். இம்முறை திமுக ஆட்சியை அகற்ற தொண்டர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கத்தி படத்தில் விஜய், 2ஜினா என்ன.. அலைக்கற்றை.. காற்றிலேயே கோடி கணக்குல ஊழல் செய்த ஊருயா இது என்று வசனம் பேசி இருந்தார். அதனை எடப்பாடி பழனிசாமியும் பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது.
-
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
அடுத்த 20 ஆண்டுகளுக்கு விஜய் தான் முதல்வர்.. தமிழ்நாட்டில் தவெக ஆட்சி மட்டும்தான்.. அமைச்சர் ஆனந்த்! -
தமிழ்நாட்டில் ஹையோசங் டிஎன்எஸ் புதிய தொழிற்சாலை.. ஏடிஎம் உற்பத்திக்கு திட்டம்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்? -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்'












Click it and Unblock the Notifications