எடப்பாடி பழனிசாமி பேச்சே வேத வாக்கு.. அவருக்கு எல்லாமே தெரியும்! அடித்து சொல்கிறார் செல்லூர் ராஜூ
மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதுதான் வேத வாக்கு. எடப்பாடி சொன்ன பிறகு அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை அவருக்கு எல்லாமே தெரியும் எனவும், 2026ல் மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு எல்லாமே தெரியும் எனவும் அவர் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரது மகன் நினைவாக ஆர்ஜே தமிழ்மணி சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக மதுரை பழங்காநத்தம் பகுதியில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," ஆறுபடை வீடு கொண்ட முருகப்பெருமானின் முதல் படை வீட்டில் நடைபெறக்கூடிய குடமுழுக்கு விழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

மதுரை மக்களின் பக்த கோடிகளின் வேண்டுகோள் தான் இது. தமிழக முழுவதும் இன்று பேசு பொருளாக இருப்பவர் திருப்பரங்குன்றம் முருகன்தான். திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் நடைபெற்றால் மணமக்களுக்கு இடையே பிரிவினை ஏற்படாது. அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று கூறியதற்கு பதில் அளித்த செல்வராஜ் இதுகுறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி விரிவாக கருத்து சொல்லிவிட்டார். தமிழக அரசின் செயல்பாடுகளில் தேக்க நிலை இருப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
கூட்டணி குறித்தும் ஆட்சி அமைப்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறிவிட்டார். தமிழக மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து செயல்படக்கூடியவர் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிசாமியின் பயணம் மக்கள் வெள்ளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்ன சொல்கிறாரோ அதுதான் வேத வாக்கு. எடப்பாடி சொன்ன பிறகு அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை அவருக்கு எல்லாமே தெரியும்.
மதுரை மண்ணில் மாநாடு வைத்தால் வெற்றி கிடைக்கும் என்பது அனைத்து கட்சியினரின் நினைப்பு. அதனால் தான் அரசியல் கட்சிகளின் கவனம் மதுரையை நோக்கி இருக்கிறது. மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக வெற்றி பெறுவது நிச்சயம். அதுதான் எங்களுடைய திட்டம். மீண்டும் அதிமுக தான் வெற்றி பெறும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications