ஷாக்.. மதுரை விஷால் டி மாலில் திடீர் தீ விபத்து.. இரவில் நடந்த பரபரப்பு.. என்ன காரணம்?
மதுரை: மதுரையில் உள்ள விஷால் மாலில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் விஷால் மால் உள்ளது. மதுரையில் புகழ்பெற்ற இடங்களில் இது ஒன்றாக உள்ளது. அடுக்குமாடி கட்டடத்தில் இயங்கும் இந்த மாலில் பல்வேறு முன்னணி பிராண்டுகளின் கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.

செல்போன் உள்பட பல்வேறு எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் பொருட்கள் கடைகள், ரிலையன்ஸ் பிராண்டுகளின் கடைகள், மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், புட்கோர்ட், பீட்சா, நூடுல் ஷாப் உள்ளிட்டவை இந்த மாலில் செயல்பட்டு வருகின்றன.
இதனால் தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த மாலுக்கு வந்து செல்வார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளின் மக்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்று மாலையில் ஏராளமான மக்கள் அந்த மாலுக்கு சென்று இருந்தனர்.

இந்நிலையில் தான் மாலின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ெஷட் போன்ற திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கிருந்த மக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது.
இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் மாலில் ஏற்பட்ட தீவிபத்துக்கான காரணம் என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. தீயை முற்றிலுமாக அணைத்த பிறகு முழுவிபரம் வெளியாக உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications