யுவராஜ் கருணை மனு கூட போட முடியாது! கண்ணகியின் மதுரையில் கோகுல்ராஜுக்கு நீதி! அரசு வழக்கறிஞர் மோகன்
மதுரை: ‛‛கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜூக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கண்ணகி நீதி கேட்டு போராடிய மதுரையில் பட்டியலின இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளது'' என அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி பா மோகன் கூறினார்.
Recommended Video
சேலம் மாவட்டம் ஓமலூர் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் நாமக்கல்லை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்தார். 2015ல் கல்லூரிக்கு சென்ற கோகுல்ராஜ், நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரை கைது செய்தனர்.

10 பேர் குற்றவாளிகள்
நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. பிறகு மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த நீதிமன்றத்தில் 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. மார்ச் 5ல் வழக்கின் தீர்ப்பு வெளியானது. தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது சகோதரர்கள் அருண், குமார், சதீஷ் குமார், ரகு, ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது.

தீர்ப்பு
அதேவேளையில் சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை மற்றும் சுரேஷ் ஆகிய 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முதல் குற்றவாளியான யுவராஜ் மீது அனைத்து குற்றங்களும் நிரூபணம் ஆனதாக நீதிமன்றம் தெரிவித்தது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் இருவருக்கும் 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. குமார், சதீஷ் குமார், ரகு, ரஞ்சித் செல்வராஜ் ஆகியோருக்கு 2ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோர்கு 5 ஆண்டு கடுங்ககாவல் சிறையும் விதிக்கப்பட்டது.

நீண்ட போராட்டத்துக்கு பின்
இதுதொடர்பாக அரசு தரப்பு வக்கீல் பவானி பா மோகன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: ‛‛கோகுல்ராஜ் முதலில் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்பட்டது. உடற்கூறு ஆராய்வில் கொலை என்பது தெரியவந்தது. வழக்கு தொடர்பாக யுவராஜ் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். கோகுல் ராஜ் கொலை வழக்கில் தூக்குதண்டனை வழங்க அவரது தாய் சித்ரா கோரினார். கோகுல்ராஜை 9 மணிநேரம் சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

கருணை மனுவுக்கு அனுமதியில்லை
அரிதிலும் அரிதான வழக்கு என கோர்ட்டில் கூறினோம். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முதலாவதாக கொலை செய்தல், பட்டியல், பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை சட்டத்தில் ஒரு ஆயுள் தண்டனையாகும். இதில் சாகும்வரை சிறையில் இருக்க வேண்டும். இதற்கு 5 ஆயிரம் அபராதமாகும். 2வதாகாக குற்ற சதி செய்து பட்டியல் இனத்தவரை கொலை செய்ததாக இன்னொரு ஆயுள் தண்டனையும், 3வதாக ஆட்கடத்தி கொலை செய்ததால்மற்றொரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
இதன்மூலம் சாகும் வரை அவர் சிறையிலேயேஇருக்க வேண்டும். பிணையில் வர முடியாது. வன்கொடுமை சட்டம் பிரிவு 360 பிரகாரம் கருணை மனுவுக்கும் அனுமதியில்லை. எதிர்காலத்தில் கருணை கொலைகளை தடுக்க இந்த தீர்ப்பு பயன்படும். கண்ணகி நீதி கேட்டு போரடிய மதுரையில் பட்டியலின இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளது'' என்றார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications