மதுரையில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை..சாலைகளில் பெருகிய வெள்ளம்
மதுரை: மதுரையின் நகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது. மதுரை தமுக்கம், கோரிப்பாளையம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் பெருகிய வெள்ளத்தால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலும் கத்திரி வெயில் காலம் போல வாட்டி வதைத்தது. தினமும் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. பகல் நேரம் மட்டுமின்றி இரவு நேரம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

நகர் முழுவதும் அனல் காற்று வீசியது. மதுரை நகர மக்கள், உச்சி நேரத்தில் வெளியில் வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். அந்தளவுக்கு வெயிலின் கொடுமை மிக கொடூரமாக இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை கொட்டி வருகிறது. சித்திரை திருவிழாவின் கொடியேற்றம் தொடங்கிய நாளில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மதுரையில் இதமான காலநிலை நிலவுகிறது. மாலை நேரங்களில் சற்று குளிர்ச்சியான சீதோஷ்ணம் நிலவியது. சித்திரை திருவிழா தொடங்கியதில் இருந்து மதுரையில் மழை பெய்து வருவதாக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென்று பகலில் இருந்து மதுரையில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்தில் மழை பல இடங்களில் கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக மதுரையில் குளுமை பரவியது. நேற்று பெய்த மழையால் பெரியார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையே குழாய் பதிக்கும் பணிக்காக கிரைம் பிராஞ்ச் அருகே மேயர் முத்து பாலம் ஏறும் வழியில் பிரதான சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு சரிவர மூடப்படாமல் விடப்பட்டு இருந்தது. நேற்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக இந்தப் பள்ளம் வாகன போக்குவரத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் மேலும் குழி விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் திடீரென ஏற்பட்ட அந்த குழிக்குள் சிக்கின. இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். பெரியார் பஸ் நிலையத்துக்கு உள்ளே வரவும் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல முடியாமலும் பேருந்துகள் சிக்கித்தவித்தன. வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாயினர்.
தமிழ்நாட்டில் இன்றும் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications