• search
மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அதான் காலே கிடையாதே.. பிறகு எப்படி காலூன்ற முடியும்.. பாஜகவை வாரிய கி.வீரமணி

|
  காலே கிடையாதே பிறகு எப்படி காலூன்ற முடியும்- பாஜகவை வாரிய கி.வீரமணி-வீடியோ

  மதுரை: பாஜகவிற்கு காலே கிடையாது. அப்புறம் எப்படி தமிழகத்தில் காலூன்ற முடியும் என்று திராவிட கழக தலைவர் கி. வீரமணி கேட்டுள்ளார்.

  மதுரையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக நிதிநிலை அறிக்கை என்பது தமிழக குடிமகன்கள் மீதான கடன்சுமையை அதிகரித்துள்ளது. இதில் வேலைவாய்ப்பை வழங்குவது குறித்து அறிவிப்பு இல்லை.

  k veeramani says bjp cannot enter into tamil nadu

  தேர்தல் கண்ணோட்டத்தோடு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடன் சுமையை மக்கள் தான் சுமக்க வேண்டும் என்ற நிலையில் மத்திய, மாநில அரசின் நிதிநிலை அறிக்கை உள்ளது. மத்திய அரசிடம் இருந்து வரக்கூடிய நிதி பங்கை மத்திய அரசிடம் கேட்டு பெறவில்லை, மத்திய அரசிடம் நிதியை வலியுறுத்தி கேட்க கூடிய நிலையில் தமிழக அரசு இல்லை.

  கடன் சுமை, பற்றாகுறை, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் தீர்வு இல்லை என்றார். அரசு ஊழியர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வூதியம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தமிழக பட்ஜெட் மூச்சு திணறலுடன் ஒப்பனை செய்த சடங்கு போல நடத்துள்ளது.

  அத்தியாவாசிய அறிவிப்புகள் ஏதும் இல்லை. மடியில் கணம் இருப்பவர்களை கூட்டணிக்கு அழைக்கிறது பாஜக. தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது ஏனென்றால் பாஜக கட்சிக்கு காலே கிடையாது. பாஜக ஒரு மிஸ்டுகால் கட்சி. பா.ஜ.க வினர் அதிமுக பா.ம.க., தேமுதிக உடன் கூட்டணி வைப்பதை வரவேற்க வேண்டும்.

  ஒரே பட்டனை அழுத்தி அழிக்க வேண்டியவர்களை அழிக்கும் வாய்ப்பு அது. தமிழகத்தில் பாஜகவோடு போட்டி என்பது நோட்டாவிற்கு மட்டும் தான். யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் நாடாளுமன்ற தேர்தலின் நிலை.

  பேராசிரியர் நிர்மலாதேவியை 10 மாதங்களாக கைது செய்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது. நிர்மலாதேவி யாரென்று எங்களுக்குத் தெரியாது மனித உரிமை அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. நிர்மலாதேவி விவகாரத்தில் பெரிய ஆட்களின் தொடர்பு இருப்பதால் மட்டுமே ஜாமின் மறுக்கப்படுகிறது என்றார்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

  மதுரை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே!
  வருடம்
  வேட்பாளர் பெயர் கட்சி லெவல் வாக்குகள் வாக்கு சதவீதம் வெற்றி வித்தியாசம்
  2014
  ஆர். கோபாலகிருஷ்ணன் அஇஅதிமுக வென்றவர் 4,54,167 47% 1,97,436
  வி. வேலுசாமி திமுக தோற்றவர் 2,56,731 27% 0
  2009
  அழகிரி எம்.கெ திமுக வென்றவர் 4,31,295 54% 1,40,985
  மோகன் பி சிபிஎம் தோற்றவர் 2,90,310 37% 0
  2004
  மோகன், பி. சிபிஎம் வென்றவர் 4,14,433 56% 1,32,840
  போஸ், எ கெ. அஇஅதிமுக தோற்றவர் 2,81,593 38% 0
  1999
  மோகன், பி. சிபிஎம் வென்றவர் 3,28,204 44% 37,223
  முத்துராமலிங்கம், பொன். திமுக தோற்றவர் 2,90,981 39% 0
  1998
  சுப்பிரமணியன் சுவாமி ஜேஎன்பி வென்றவர் 2,66,202 40% 20,897
  ராம்பாபு எ.ஜி.எஸ் டி எம் சி ( எம்) தோற்றவர் 2,45,305 37% 0
  1996
  ராம் பாபு ஏ.எஸ்.எஸ் டி எம் சி ( எம்) வென்றவர் 3,34,055 46% 1,89,806
  சுப்பிரமணியன் சுவாமி ஜேஎன்பி தோற்றவர் 1,44,249 20% 0
  1991
  ராம் பாபு எ.ஜி.எஸ். காங்கிரஸ் வென்றவர் 4,25,769 68% 2,42,160
  மோகன் பி. சிபிஎம் தோற்றவர் 1,83,609 29% 0
  1989
  எ.ஜி.எஸ். ராம் பாபு காங்கிரஸ் வென்றவர் 4,56,442 64% 2,13,778
  வி. வேலுசாமி திமுக தோற்றவர் 2,42,664 34% 0
  1984
  சுப்புராமன் எ.ஜி காங்கிரஸ் வென்றவர் 3,65,948 63% 1,73,011
  சங்கரய்யா என். சிபிஎம் தோற்றவர் 1,92,937 33% 0
  1980
  சுப்புராமன் எ.ஜி ஐஎன்சி(ஐ) வென்றவர் 2,92,380 56% 69,195
  பாலசுப்ரமணியம் எ. சிபிஎம் தோற்றவர் 2,23,185 42% 0
  1977
  சுவாமிநாதன் ஆர்.வி. காங்கிரஸ் வென்றவர் 2,99,309 62% 1,34,345
  ராமமூர்த்தி பி. சிபிஎம் தோற்றவர் 1,64,964 34% 0
  1971
  ஆர். வி. சுவாமிநாதன் காங்கிரஸ் வென்றவர் 2,27,060 51% 72,359
  எஸ். சின்ன கரும்பா தேவர் என்சிஓ தோற்றவர் 1,54,701 35% 0

   
   
   
  English summary
  DK leader K Veeramani has said that it is highly impossible to BJP to win in Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more