காசுக்காகக் கூடுவது கும்பல்.. லட்சியத்திற்காக திரள்வது புரட்சி.. கமல்ஹாசன் ட்வீட்
மதுரை: காசுக்காகக் கூடுவது கும்பல். லட்சியத்திற்காக திரள்வதுதான் புரட்சி என கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டு கொண்டு தேர்தலை சந்திக்கவுள்ளன.
மக்கள் நீதி மய்யமும் ஆன்மீக அரசியலும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?.. கமல் பதில் இதுதான்!

இந்த நிலையில் கமல்ஹாசன் மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை இன்று தொடங்கி வைத்தார். மதுரையில் அவர் சென்ற இடத்தில் எல்லாம் மக்கள் கூட்டம் கூடியது.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் கூறுகையில் காசுக்காகக் கூடுவது கும்பல்; லட்சியத்திற்காகத் திரள்வதன் பெயர் புரட்சி! மக்கள் புரட்சியை மதுரையில் நிகழ்த்திக் காட்டிய எம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும், அணிகளுக்கும், உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள். #எதுவும்_தடையில்லை #சீரமைப்போம்_தமிழகத்தை என கமல் தெரிவித்துள்ளார்.