மக்கள் நீதி மய்யமும் ஆன்மீக அரசியலும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா?.. கமல் பதில் இதுதான்!
மதுரை: மக்கள் நீதி மய்யத்தின் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது என கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வரும் 2021 ஆம் ஆண்டு தமிழகம் சட்டசபை தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் மதுரையில் தனது முதல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் தொடங்கினார். முன்னதாக மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் தொடங்கியது மக்கள் நீதி மய்யம். அதனால் இங்கிருந்து பிரசாரம் செய்வதுதான் உசித்தம் என்று தோன்றியதால் இங்கிருந்து துவங்குகிறோம். சில அனுமதிகள் மறுக்கப்பட்டாலும் பொங்கிவரும் புது வெள்ளத்திற்கு சிறுமடைகள் தடையாகாது.
களம் வரும் கமல்ஹாசன்.. நாளை மறுநாள் தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்.. தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம்

தடை புதிதல்ல
சட்டத்திற்கு உட்பட்டு எப்படியெல்லாம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோமோ அதன்படியே பிரச்சாரம் நடக்கும். சில இடங்களில்அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதுவும் கடைசி நேரத்தில், இருந்தாலும் எங்களுக்கு தடைகள் புதிதல்ல.

கருத்து
சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் செய்வதாக இருக்கிறோம். அதை மீறும் எண்ணம் எங்களுக்கு இல்லை. யாருக்கெல்லாம் எங்களது கருத்து யாருக்கு குத்தலாக இருக்கிறதோ அவர்கள் தடை செய்வார்கள்.

3ஆவது அணி
அதையும் மீறிதான் இந்தப் பிரச்சாரம் நடக்கும் என்றார். அப்போது அவரிடம் மக்கள் நீதி மய்யமும் ஆன்மீக அரசியலும் ஒன்றாகக் களமிறங்கி 3ஆவது அணி அமைய வாய்ப்புள்ளதா என கேட்கப்பட்டது. அதற்கு நான் இதற்கு முன்பு கூறி இருக்கிறேன்.

சாத்தியம்தான்
அணிகள் பிளவுபடும் அணிகள் கூடும். இப்போது இதுதான் சொல்ல முடியும். மூன்றாவது அணி சாத்தியமே.. ஆனால் எப்போது சாத்தியம் என்பதை இப்போது கூற முடியாது என பதிலளித்தார்.