முன்ஜாமீன் தாங்க.. தவெகவின் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு.. விசாரணை எப்போது?
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் முன்ஜாமீன் கோரிய மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த 3ம் தேதி மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அவர் முன்ஜாமீன்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
கரூர் வேலுசாமி புரத்தில் கடந்த மாதம் 27 ம் தேதி நடிகரும், தவெக தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். இப்படியான சூழலில் தான் புஸ்ஸி ஆனந்த் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மீண்டும் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிமன்றம் முதலில் பட்டியலிடும். அதன்பிறகு வழக்கு விசாரணைக்கான தேதி, நேரம் வெளியிடப்படும். அதன்பிறகு இந்த மனு விசாரணைக்கு வரும். முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் இந்த மனுவை 2வது முறையாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே அவர் முதலில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு அவரை மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இனி அவரது மனுவை 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும்.
முன்னதாக போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீது கடந்த 3ம் தேதி விசாரைண மேற்கொள்ளப்பட்டது.
அப்போது வழக்கு தொடக்க நிலையில் உள்ளது. இதனால் இருவருக்குமு் முன்ஜாமீன் கொடுக்க கூடாது என்று தமிழக அரசு வாதம் வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தோடு, அவர்களின் மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது.
இதனால் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்ற தகவல் ஆனால், தனிப்படை போலீசார் இன்னும் இருவரையும் கைது செய்யவில்லை. தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இந்நிலையில் தான் புஸ்ஸி ஆனந்த் மீண்டும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications