2ஆம் தலைநகரம் மதுரை? ஏங்க அவரு சொன்னாரு! என்கிட்ட கேட்கிறீங்க! அமைச்சர் கே.என்.நேரு டென்ஷன்!
மதுரை: மதுரையை 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திடீரென டென்ஷன் ஆகிவிட்டார்.
ஏங்க அவரு சொன்னாரு, என் கிட்ட கேட்கிறீங்க என பக்கத்தில் நின்ற அமைச்சர் மூர்த்தியை கை காட்டிய கே.என்.நேரு, இதெல்லாம் முதலமைச்சர் ஆலோசனை செய்து அறிவிக்க வேண்டிய விஷயம் எனக் கூறி நழுவிக்கொண்டார்.
இதனிடையே மதுரையை 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து அமைச்சர் மூர்த்தியும் கோபம் அடைந்தார். இருப்பினும் முகத்தை கடுகடுவென வைத்துக் கொண்டு அந்த செய்தியாளரையே பார்த்தவண்ணம் நின்று கொண்டிருந்தார்.
மதுரையை 2ஆம் தலைநகரம் என்றும் தாம் சொல்லவில்லை என்றும் 2 ஆம் தலைநகரை போல் அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று தான் கூறியதாக அமைச்சர் கே.என்.நேரு ஒரு விளக்கம் கொடுத்தார்.
மதுரையை பொறுத்தவரை வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக வரும் புகார்களை பரிசீலித்து இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் ஒரு திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்றும் அதன் மீதான நிதி ஆதாரத்தை பெற்ற பிறகு பணிகள் தொடங்கும் எனவும் உறுதியளித்தார்.

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் 2வது தலைநகரமாக திருச்சியை அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், மதுரையை அறிவிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும் ஏற்கனவே கோரிக்கை விடுத்து வரும் வேளையில் இந்த நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1191 குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுபாடின்றி கிடைக்கும் வகையில் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் நேரு கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications