“இப்போதைக்கு அமைதியாக இருப்பதே நல்லது”.. மதுரை மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு சிறப்பு பேட்டி..!
மதுரை : மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலையில் தான் அமைதியாக இருப்பதே நல்லது என மதுரை மருத்துவக் கல்லூரியில் முதல்வர் ரத்தினவேலு கூறியுள்ளார்.
நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.
அப்பொழுது முதலாம் ஆண்டை சேர்ந்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர் உறுதிமொழியில் கிப்போ கிராட்டிக் ஓத் (hippocratic oath) உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரத் சப்த் என்று அழைக்க கூடிய சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

சமஸ்கிருத சர்ச்சை
இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு இது குறித்து விளக்கம் அளிக்க மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பினார் நோட்டீஸ் அனுப்பிய சில மணி நேரங்களிலேயே மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேலு அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடும் கண்டனம்
அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் அனைத்து மருத்துவ கல்லூரியும் முதலாம் ஆண்டு மாணவர்கள் எப்போதும் எடுக்கக்கூடிய முறைப்படி உறுதிமொழி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பலிகடா ஆக்கப்பட்டாரா?
இது ஒருபுறம் இருந்தாலும் மாணவர்கள் தாங்களாகவே உறுதிமொழி எடுக்க அதில் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு பலிகடா ஆக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. டீன் ரத்தினவேலு கொரோனா காலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றினார் என்றும் மருத்துவக் கல்லூரி டீனுக்கு தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்த தவறை செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் செய்த தவறுக்கு அவர் எப்படி பொறுப்பேற்க முடியும் எனவும் இரு மாதங்களுக்கு முன்பே இதுகுறித்த அறிக்கை ஒன்றும் வெளியானதாக செய்திகள் வெளியானது.

பலரும் ஆதரவு
"அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை" என்று என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் பலரும் அவருக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
Recommended Video

ரத்தினவேலு விளக்கம்
இந்நிலையில் தற்போதைய சூழ்நிலையில் "தான் அமைதியாக இருப்பதுதான் நல்லது" என மதுரை டீன் ரத்தினவேலு கூறியுள்ளார் . ஒன்இந்தியா தமிழுக்காக ரத்தினவேலுவை தொடர்பு கொண்டு பேசியபோது இந்த விவகாரம் குறித்தும் ப.சிதம்பரம் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் தற்போது நான் அமைதியாக இருப்பதுதான் நல்லது, நேரம் வரும்போது நிச்சயம் பேசுவேன் என கூறினார். புற அழுத்தங்கள் காரணமாக இந்த விவகாரத்தில் ரத்தினவேலு மீது குற்றம் சாட்டப்பட்டு இருப்பதாகவும் உண்மை நிச்சயம் வெளியே வரும் என மதுரையில் இருந்து பேசிய மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் கூறினார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications