மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் VVIP-கள் வருகையின்போது மின் தடை விவகாரம்.. இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அடுத்தடுத்து இரண்டு நாட்களாக, முக்கிய விஐபிக்களின் வருகையின் போது மின்தடை ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இளநிலை பொறியாளர் ஜானகிராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின் வெட்டு அதிகமாக இருந்து வருகிறது. இந்தியத் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கடந்த அக்.30 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தை முடித்துக் கொண்டு, அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்து பேசத் தொடங்கினார்.

meenakshi amman temple

அவர் பேசிக்கொண்டிருந்த அந்தச் சமயத்தில், எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து இரண்டு முறை மின்தடை ஏற்பட்டது. துணை குடியரசுத் தலைவர் பேசும் போதே மின்தடை ஏற்பட்டதால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே திடீர் பரபரப்பு நிலவியது.

முன்னதாக அக்டோபர் 29 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவர் கோயிலுக்குள் இருந்தபோதும் இதேபோல திடீரென மின்தடை ஏற்பட்டது. அப்போது சுமார் 10 நிமிடங்கள் வரை மின்தடை நீடித்ததாகத் தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலமாகவும், எப்போதும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக அதுவும் அடுத்தடுத்து முக்கியப் பிரமுகர்கள் வருகை தந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார், "குடியரசு துணைத் தலைவர் வருகையையொட்டி, பிற்பகல் 3:30 மணி முதல் கோயில் முழுவதுமாக ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. தரிசனம் முடித்த பிறகு கிழக்கு கோபுரத்துக்கு முன்னால் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த நேரத்தில், கோயில் மின் அறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கோயிலுக்குள் மின்தடை ஏற்பட்டது. உடனடியாக, மின்சாரம் ஜெனரேட்டரிலிருந்து மின்சார வாரியத்தின் விநியோகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றம் 2 நிமிடங்களுக்குள் மேற்கொள்ளப்பட்டது" என்று தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+