மதுரைக்கு வருகிறது "மெட்ரோ லைட்".. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை.. இதுதான் ரூட்.. என்ன சிறப்பு?
மெட்ரோ ரயிலை அமைப்பது தொடர்பாக பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் நிறுவனம் ஆய்வு செய்தது.
மதுரை: மதுரையில் செயல்படுத்தப்பட உள்ள மெட்ரோ ரயில் திட்டம் மெட்ரோ லைட் ரயிலாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது சென்னை மெட்ரோவை விட கொஞ்சம் குறைவான தூரத்திற்கு, கொஞ்சம் குறைவான வேகத்தில் மெட்ரோ லைட் இயக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் வளர்ந்த மாவட்டங்களான திருச்சி, சேலம், கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.
சென்னையில் மெட்ரோ பணிகள் முடிந்து, தற்போது புதிய மார்க்கமாக மெட்ரோ போடப்பட்டு வருகிறது. சென்னையில் இப்போதுதான் மெட்ரோவை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்னும் பல மாவட்டங்களுக்கு மெட்ரோவை அறிமுகப்படுத்த போவதாக திமுக தெரிவித்தது.
அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு நடவடிக்கைள் எடுக்கப்படும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.

ஆய்வு
இங்கு மெட்ரோ ரயிலை அமைப்பது தொடர்பாக பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் நிறுவனம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமீபத்தில் இந்த நிறுவனம் வழங்கியது. இந்த நிலையில்தான் மதுரையில் மெட்ரோ லைட் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ரூட் மேப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை இந்த மெட்ரோ லைட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 31 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ லைட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ லைட்
இந்த ரிப்போர்ட்டில் இருக்கும் முழு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த மெட்ரோ சுரங்க பாதையாக இருக்காது. மாறாக மொத்த பாதையும் பாலம் கட்டப்பட்டு அதில்தான் அமைக்கப்படும். திருமங்கலத்தில் தொடங்கி ஒத்தக்கடை வரை மொத்த சிட்டி உள்ளேயும் பல்வேறு பகுதிகளை கடந்து இந்த மெட்ரோ பாதை செல்லும். திருமங்கலம், கப்பலூர் டோல் பிளாசா, தர்மத்துப்பட்டி, தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பசுமலை, வசந்தா நகர், மதுரா கல்லூரி, மதுரை சந்திப்பு, சிம்மக்கல், கீழவாசல், தெற்குவாசல், கோரிப்பாளையம், போலீஸ் கமிஷனர் அலுவலகம், கே. புதூர், மாட்டுத்தாவணி, உத்தங்குடி, உயர்நீதிமன்ற பெஞ்ச் மற்றும் ஒத்தக்கடை ஆகிய பகுதிகள் வழியாக இந்த மெட்ரோ லைட் செயல்படும்.

20 ஸ்டாப்கள்
மொத்தம் 20 ஸ்டாப்கள் இங்கே செயல்படும். இதில் மதுரா கல்லூரிக்கு பின் சிம்மக்கல் வழியாக ஒரு ரூட் செல்லும். இன்னொரு ரூட் தெற்குவாசல் வழியாக செல்லும். இந்த இரண்டு பாதை குறிப்பிட்ட 3 ஸ்டாப்களுக்கு மட்டும் உள்ளது. இந்த ஸ்டாப்களில் இறங்க வேண்டிய மக்கள் மட்டும் லேன் மாறி செல்ல வேண்டும். இது மெட்ரோ லைட் என்பதால் அதிக அளவில் லேன்கள் இங்கே இருக்காது. இங்கவே மெட்ரோ 25 கிமீ வேகத்தில் மட்டும் செல்லும். அதிகபட்சம் 60 கிமீ வேகத்தில் செல்ல முடியும் என்றாலும் தொடக்கத்தில் 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். இதில் மெட்ரோவின் டெப்போ திருமங்கலத்தில் அமைக்கப்படும்.

மெட்ரோ
இந்த ரிப்போர்ட்டை செயல்படுவத்துவதே இப்போதைய நோக்கம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதை செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகளை இனி மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்யும். உண்மையான செலவு, கட்டிடங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள், சாலைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள், அதனால் ஏற்பட உள்ள சமூக, பொருளாதார மாற்றங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. முன்னதாக மதுரை விமான நிலையத்தில் இருந்து காட்டுப்புலிநகர் வரையும், நாகமலை புதுக்கோட்டை முதல் மணலூர் வரையும் மெட்ரோ அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் திருமங்கலம் - ஒத்தக்கடை பாதைக்கு அதிக எதிர்பார்ப்பு, கோரிக்கை இருந்ததால், அந்த பாதையே இறுதி செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications