மதுரையில் விபத்தில் சிக்கி தலையில் காயம்.. அழுகிய தலையுடன் முதியவர் மருத்துவமனையில் அனுமதி
மதுரை: மதுரையில் அழுகிய தலையுடன் அவதிப்பட்டு வந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் செல்லூரில் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க முதியவர் தண்டபாணி. இவர் சிறு வயதிலிருந்தே அந்தப் பகுதியில் உள்ள தெருக்களில் வசித்து வந்துள்ளார்.
உறவினர் யாருமில்லாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தறி கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டே அக்கம்பக்கத்தினர் தரும் உணவை சாப்பிட்டு விட்டு அந்த பகுதியில் சாலையோரம் மற்றும் திண்ணையில் படுத்து உறங்கி வந்துள்ளார்.

விபத்து
இந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கால் நெசவுத் தொழில் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டதால் சரிவர வேலை இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள மக்கள் முதியவருக்கு உணவு கொடுத்து வந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உணவு கொடுக்க
இந்த நிலையில் மருத்துவமனை செல்ல யாரும் இல்லாததால் அந்த காயம் பெரிய அளவில் மாறி தலையின் இடது புறம் முழுமையாக அழுகி நீர் வடிய தொடங்கியது. இதனால் முதியவருக்கு அருகே துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்கள் யாரும் அவரின் அருகே செல்வதையும் உணவு கொடுப்பதையும் நிறுத்தி விட்டனர்.

தகவல்
இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் அவரை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மற்றும் மதுரையைச் சேர்ந்த இதயம் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர்.

முதியவர்
தகவலறிந்து வந்த தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சிவக்குமார் தலைமையிலான குழுவினர் முதியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று உடனிருந்து கவனித்து வருகிறார்கள். தான் காயம் அடைந்ததை யாரிடமாவது சொல்லியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என ஊர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications