ஸ்ரீவில்லிபுத்தூர் கொலை வழக்கில் கைதான மதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவுக்கு நிபந்தனை ஜாமீன்
மதுரை: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கொலையில் கைதான மதுரையை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டி வலசையைச் சேர்ந்தவர் சத்தியஷீலா. இவர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாம் மற்றும் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டராக இருந்தார். இவருக்கும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ராம்குமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவருடன் இணைந்து வாழ்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன் சிவகங்கை மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.

அங்கு பணியாற்றியபோது தொழிலதிபர் ஒருவர் மீது போக்சோ வழக்கை பதிவு செய்தார். இதனால் தொழிலதிபர் தற்கொலை செய்துகொண்டார். அந்த விவகாரம் உயர் நீதிமன்றம் சென்றதால், விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி சத்தியஷீலா உட்பட 10 பேர்மீது வழக்கு பதிவுசெய்தது. அந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே ராமநாதபுரம் மாவட்டத்துகு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் 21-ம் தேதி நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ராமர் என்பவர் மரணமடைந்தார்.
இக்கொலையில் சம்பந்தப்பட்ட ராம்குமாரை பெங்களூருவில் போலீஸார் கைதுசெய்தபோது அவருடன் தங்கியிருந்த இன்ஸ்பெக்டர் சத்தியசஷீலாவையும் போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி துரை, சத்தியஷீலாவை சஸ்பெண்ட் செய்தார்.
இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், " விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கோவில் திருவிழாவின்போது ராமர் என்பவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கினார்கள். படுகாயம் அடைந்த அவர் இறந்ததாகவும் போலீசார் வழக்குபதிவு செய்தார்கள். இதுதொடர்பாக என் மீதும் புகார் கூறப்பட்டது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் இடம்பெறவில்லை.
என் மீது உள்நோக்கத்துடன் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. இதற்கிடையே என்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா ஜாமீன் கேட்ட மனு மீதான தீர்ப்பை நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி பிறப்பித்தார். அதில், மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர், மறு உத்தரவு வரும் வரை நாள்தோறும் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications