மதுரை அருகே காதலிக்க மறுத்த பெண் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர் கைது! கையில் எலும்பு முறிவு!
மதுரை: மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளம்பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் அவரை சித்திக் ராஜா என்ற இளைஞர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரல் ஆகியிருந்தது. இந்நிலையில் அவர் கைதாகியுள்ளார். போலீசார் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற சித்திக் ராஜாவுக்கு கை எலும்பு முறிந்துள்ளது.
மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே உள்ள சக்கரா நகரில் தனியார் ஜெராக்ஸ் கடையில் இளம்பெண் ஒருவர் நான்கு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த சித்திக் ராஜா (25) தன்னை காதலிக்க வற்புறுத்தி, தினமும் ஜெராக்ஸ் கடையில் நேரில் சென்று அந்த இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி கடையில் இருந்த அந்தப் பெண்ணிடம் காதலிக்க வற்புறுத்தியுள்ளார் சித்திக் ராஜா. அதனை லாவண்யா மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த சித்திக் ராஜா கடைக்குள் புகுந்து அப்பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார்.
படுகாயம் அடைந்த இளம்பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
காதலிக்க மறுத்த பெண் மீது இளைஞர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தமிழகத்தையே அதிர வைத்தது. இந்நிலையில், ஜெராக்ஸ் கடையில் பணியாற்றும் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞர் சித்திக் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெராக்ஸ் கடையில் நுழைந்து தாக்கிய சித்திக் ராஜா மற்றும் அவரது நண்பர் ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையின் போது தப்பிக்க முயன்ற சித்திக் ராஜாவுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டு போடப்பட்டுள்ளது.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications