மதுரை டைடல் பார்க்.. ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.. அமைச்சர் டிஆர்பி ராஜா அப்டேட்!
மதுரை: மதுரையில் நடந்து வரும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் ஜூலை மாதத்தில் நிறைவடையும் என்று அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். டைடல் பார்க் 12 மாடிகள் கொண்ட பிரம்மாண்டமான கட்டடமாக இருக்கும் என்று கூறிய டிஆர்பி ராஜா, தற்போது வரை 20 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மதுரையின் மாவட்ட இளைஞர்களின் மிக முக்கிய கனவுகளில் ஒன்று டைடல் பார்க். 2023ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதன்பின் டெண்டர் பணிகள் நடந்து, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

மொத்தமாக 5.34 லட்சம் சதுவ அடியில் தரைதளம் மற்றும் 12 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட இந்திய தொழிலாளர்கள் அதிகமானோர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தரைதளம் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்தடுத்த பணிகள் நடந்து வருகின்றன.
கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட போது 18 மாதங்களில் கட்டி முடித்து 2026 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக மதுரை பெய்த கனமழை காரணமாக கட்டுமான பணிகள் தாமதமாகியது. இதனால் டைடல் பார்க் பணிகள் நிறைவடைய தாமதம் ஆகுமோ என்று பலரும் சந்தேகம் கொண்டனர்.
இந்த நிலையில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மதுரை டைடல் பார்க் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது டைடல் பார்க் கட்டுமான பணிகள் முடிவடைந்த பின் எப்படி இருக்கும் என்ற புகைப்படத்தையும் காட்டினார். தற்போது 2வது தளம் முடிவடைந்து, 3வது தளத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதன்பின் டிஆர்பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுக ஆட்சியில் மதுரைக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது டைடல் பார்க் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன்பின் மார்ச் மாத இறுதியில் முழுமையாக பணிகள் தொடங்கப்பட்டன.
2026 ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் டைடல் பார்க் கட்டுமான பணிகள் நிறைவடைந்து முழுமையாக தயாராகும் என்று நம்புகிறோம். மதுரையில் இதுபோன்ற பிரம்மாண்ட கட்டிடம் இல்லை. 5.34 லட்சம் சதுர அடியில், 12 மாடி கொண்ட கட்டடமாக கட்டப்பட்டு வருகிறது. தற்போது வரை 15 முதல் 20 சதவிகித பணிகள் நிறைவடைந்துள்ளது.
எப்போதும் தரைதளம் மற்றும் முதல் 2 தளங்களுக்கான பணிகள் தான் அதிக நேரம் பிடிக்கும். அது தற்போது நிறைவடைந்துவிட்டது. இதையடுத்து அடுத்தடுத்த தளங்கள் விரைவாக முடிந்துவிடும். திமுக ஆட்சியில் ஏராளமான வரலாற்று சாதனை படைக்கப்பட்டு வருகிறது. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு நிச்சயம் பதில் அளிப்போம் என்று தெரிவிவித்துள்ளார்.
-
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
திமுகவையும் விடாத பிரேமலதா.. 3 சிட்டிங் எம்எல்ஏக்களை கைவிட ஸ்டாலினுக்கு அழுத்தம்.. புது தலைவலி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications