கிளாமர் வீடியோ போட்ட காதலி.. தெறித்து ஓடிய காதலர்.. அவர் விஜய் ரசிகராம்.. விரட்டும் அஜீத் ரசிகை
காதலனை டிக்டாக் வீடியோ மூலம் காதலி தேடி கொண்டிருக்கிறார்
Recommended Video
மதுரை: தன்னுடைய கிளாமர் வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டதும்... காதலன் பிச்சிக் கொண்டு ஓடிவிட்டார்.. விஜய் ரசிகரான அந்த காதலனை, அஜித் ரசிகையான காதலி தன் டிக்டாக் வீடியோ மூலம் தேடி வருகிறார்.. "நீ எங்கே... என் அன்பே" என்று இந்த காதல் அக்கப்போர்தான் டிக்டாக்கில் வைரலாகி வருகிறது.
மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக்.. இவரிடம் காதல் வலையில் திவ்யா என்ற இளம்பெண் ஒருவர் விழுந்துள்ளார்.
இந்த பெண் டிக்டாக் வீடியோவில் பிஸியாக இருப்பவர்.. எம்எஸ்சி பட்டதாரியும்கூட.. இவரது பல டிக்டாக் வீடியோவை கண்ட கார்த்திக்கும் மயங்கிவிட்டார்.. அதனால் அவரும் திவ்யாவை காதலித்தார்.

ரசிகர்கள்
திவ்யா அஜித் ரசிகை.. கார்த்திக் விஜய் ரசிகர்.. இந்த மோதல்தான் காதலாக ஆரம்பமானது.. இருவருமே காதலின் உச்சத்தில் இருந்தனர்.. அப்போது திடீரென திவ்யா டிக்டாக்கில் ஆபாச, கிளாமர் டிக்டாக் வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது... இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக் காதலையும் முறித்து கொண்டுள்ளார்.. மேலும் காதலியை பார்ப்பதும், பேசுவதையும் தவிர்த்துள்ளார்..

டிக்டாக்
இது டிக்டாக் திவ்யாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. காதலனிடம் பேச பலவகையில் முயன்றும் தோற்று போனார்.. காதலன் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.. அதனால் தற்கொலையே செய்து கொள்ளலாமா என்ற முடிவுக்கும் வந்துவிட்டார்.. ஆனாலும் தன் காதலன் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உள்ளார்... அதனால்தான் பலவிதமான டிக்டாக் வீடியோ செய்து அதன்மூலம் காதலனை தேடி வந்து கொண்டிருக்கிறார்.

காதலன்
அது மட்டுமல்ல... டிக்டாக் காதலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கடலில் குளித்துவிட்டு மாதாவிடம் ஜெபம் செய்ய போன்ற வீடியோ ஒன்றையும் திவ்யா பதிவிட்டார்.. குளித்த பின்பு குளிரில் நடுங்கியபடியே காதலனுக்கு டிக்டாக்கில் வீடியோ ஒன்றையும் பதிவிட்டார்.. இப்படியே பல பல வீடியோக்களை பதிவிட்டு காதலனை தன்னிடம் வந்துவிடும்படி அழைத்து வருகிறார்.. ஆனால் காதலன்தான் இன்னும் வரவில்லை.

வீடியோ
ஆனாலும் திவ்யா மனம் தளரவேயில்லை.. தொடர்ந்து கண்ணீர், சோக வீடியோக்களை போட்டு கொண்டே இருக்கிறார். "காதலனை தேடுவதாக கூறி அழுது அடம்பிடித்து பதிவிடும் இந்த டிக்டாக்கை பெண்ணின் அலும்பலும் சேட்டையும் தாங்க முடியாமல் அந்த பையன் ஓடாமல் இருக்க வேண்டுமே" என்று கமெண்ட்கள் வந்து குவிகின்றன. கிளாமர் வீடியோவை பதிவிட போய்.. காதலன் மிரண்டு ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
