வன்னியருக்கான 10.5% இடஒதுகீடுக்கு எதிராக ஓரணியில் 115 ஜாதிகள்....திமுக அரசுக்கு நெருக்கடி?
மதுரை: வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு அமல்படுத்தக் கூடாது என்பதை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் வலியுறுத்த 115 ஜாதிகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நிலையில் மிக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இந்த உள் இடஒதுக்கீடுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலின் போது வன்னியர் உள் இடஒதுக்கீடுக்கு எதிராக தென் மாவட்டங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவே செல்ல முடியாத நிலையும் இருந்தது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைந்தது. இதனால் வன்னியர் உள் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுமா? இல்லையா? என்கிற கேள்வியும் எழுந்தது. தற்போது கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் சற்று அடங்கியே இருந்தது.

மதுரையில் ஆலோசனை
இந்த நிலையில் மதுரையில் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள 115 ஜாதிகளின் பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். இதில் வன்னியருக்கான உள் இடஒதுக்கீடுக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடிவு
இதனால் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். அத்துடன் 115 ஜாதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இது தொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். இதனால் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரம் தலைதூக்கியுள்ளது.

திமுக அரசு என்ன செய்யும்?
ஏற்கனவே நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தை திமுக எப்படி கையாளப் போகிறது? என்பது எதிர்பார்ப்புக்குரியதாகிவிட்டது.
-
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications