மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு பக்கம் வாக்கிங்.. மறு பக்கம் டாக்கிங்.. அட பனியன் மேல யாரு பாருங்கோ.. மதுரையை கலக்கிய ஸ்டாலின்

மதுரை மாட்டு தாவணியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    MK Stalin campaign: மதுரையை கலக்கிய ஸ்டாலின்- வீடியோ

    மதுரை: வந்துட்டார்.. பழைய ஃபார்முக்கு வந்துட்டார்! ஒரு பக்கம் வாக்கிங்.. மறு பக்கம் டாக்கிங்.. என்று மதுரையையே இன்று அதிர விடிய வைத்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

    மதுரையில் ஏன் திமுக நேரடியாக போட்டியிடாமல், கூட்டணி கட்சிக்கு சீட் தந்தது? என்ற கேள்வி பரபரப்பாக எழுப்பப்பட்டது. அழகிரி மீது பயமா? அல்லது அதிமுக கூட்டணி ஸ்ட்ராங்காக இருப்பதால் கலக்கமா? என்றும் சந்தேகங்கள் நிலவின. அதனால் மதுரை பக்கம் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு செல்வாரா என்றுகூட பேசப்பட்டது.

    ஆனால் இந்த எல்லா யூகத்தையும் தூக்கி தூரமாக போட்டுவிட்டு, மதுரையை கலக்க ஆரம்பித்துவிட்டார் ஸ்டாலின்! மஞ்சள் கலர் டீ-ஷர்ட், புளூ கலர் ட்ராக் சூட், ஜாக்கிங் ஷூ, கையில் வாட்ச் என வாக்கிங் கிளம்பிவிட்டார். சரி.. வாக்கிங்தான் போகிறார் போல என்று பார்த்தால், கூடவே பிரச்சாரமும் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

    வீதி வீதியாக போகும் ஓபிஎஸ் குடும்பம்.. பணத்தை வாரி இறைக்கும் தங்கம்.. சிவனேன்னு இருக்கும் ஈவிகேஎஸ்! வீதி வீதியாக போகும் ஓபிஎஸ் குடும்பம்.. பணத்தை வாரி இறைக்கும் தங்கம்.. சிவனேன்னு இருக்கும் ஈவிகேஎஸ்!

    ஜாக்கிங்

    ஜாக்கிங்

    மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டில்தான் இந்த வாக்கிங் ஆரம்பித்தது. கூடவே மார்க்சிஸ்ட் வேட்பாளார் வெங்கடேசன் வந்து கொண்டிருந்தார். வழியில் ஜாக்கிங் போனவர்கள், சும்மா நடந்து போனவர்கள் வரை ஒருத்தரை விடவில்லை.

    சு.வெங்கடேசன்

    சு.வெங்கடேசன்

    எல்லோரிடமும் நெருங்கி சென்று கைகுலுக்கி வாக்கு கேட்டார். மேலும் பைக், லாரிகளில் சென்றவர்களும் ஸ்டாலினை பார்த்து ஒரு பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினார்கள். அவர்களிடமும் ஸ்டாலின் வெங்கடேசனுக்காக வாக்கு சேகரித்தார். ஆனால் இதெல்லாம் 3 வருஷத்துக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரியே இருந்தது. ஸ்டாலினிடம் இந்த ஸ்மார்ட் லுக்கும் மிஸ்ஸாகி இருந்தது. இப்போது அதே பாணி.. அதே ஸ்டைல்.. அதே வேகம்.. தெரிகிறது.

    ஹைலைட்

    ஹைலைட்

    காலங்காத்தாலேயே மதுரை வெயில் மண்டையைப் பிளந்தாலும், எதையுமே ஸ்டாலின் பொருட்படுத்தவில்லை. எத்தனை பேர் செல்பி எடுக்க வந்தாலும், சளைக்காமல் அவர்களை கூப்பிட்டு செல்பி எடுத்து கொண்டார். இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், ஒரு இளைஞர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவரும் மஞ்சள் டீ-ஷர்ட்தான். ஸ்டாலினை பார்த்ததும் செல்பி எடுக்க வந்தார்.

    அஞ்சாநெஞ்சன்

    அஞ்சாநெஞ்சன்

    ஸ்டாலினும் சிரித்தபடியே போஸ் கொடுத்து அவருடன் போட்டோ எடுத்து கொண்டார். அந்த இளைஞரின் டீ-ஷர்ட்டை அருகில் சென்று பார்த்தால்தான் தெரிகிறது... அந்த சட்டைக்குள் ஒரு உருவம் தெரிகிறது.. அந்த உருவம் யார் என்று உற்று பார்த்தால்.. அட நம்ம அஞ்சாநெஞ்சன் அழகிரி! பனியனை ஸ்டாலினும் கூட பார்த்திருப்பார்.. இருந்தாலும் விடவில்லை.. சிரித்தபடியே ஒரு ஜாலியா செல்பி எடுத்து விட்டு கூலாக கிளம்பிச் சென்றார்.

    English summary
    DMK Leader MK Stalin campaigned for CPM Candidate Su Venkatesan as he was walking in Madurai
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X