மதுரை டீக்கடையில் நடந்த கொடூரம்.. அதிமுக நிர்வாகி தலை துண்டித்துக் கொலை.. நடந்தது என்ன?
மதுரை: மதுரையில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செந்தில்குமாரின் டீக்கடை முன்பு மது அருந்திக் கொண்டிருந்தவர்களை தட்டிக் கேட்டதையடுத்து, அவரது தலையைத் துண்டித்து மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எதிர்க்கட்சியினர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றன. அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகே சாமநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியின் அருகே சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தனசேகர பாண்டியன் என்கிற செந்தில் குமார் (33). இவர் நெடுங்குளம் சாலையில் டீக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
தலை துண்டித்து கொலை
செந்தில்குமாருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தினந்தோறும் காலை 6 மணிக்கு டீக்கடையை திறப்பது வழக்கமாம். இந்நிலையில், செந்தில்குமார் இன்றும் வழக்கம்போல் காலை 6 மணிக்கு டீக்கடையை திறந்துள்ளார். அப்போது, டீக்கடை வாசலில் அமர்ந்திரு்த மூன்றுக்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் செந்தில்குமாரை கொடூரமாகத் தாக்கி, தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர்.
தப்பிய மர்ம கும்பல்
கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலிருந்த அந்த கும்பலினர் தப்பிச் சென்றுள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, ரத்த வெள்ளத்தில் கிடந்த செந்தில் குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் விசாரணை
விசாரணையில், செந்தில்குமாரின் கடையின் முன்பு மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்த நபர்கள் அவ்வழியாக செல்பவர்களுடன் தகராறிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். இனி கடையின் முன்பு அமர்ந்து மது அருந்தக் கூடாது என்று கண்டித்துள்ளார். இன்றும் செந்தில்குமார் அந்த கும்பலை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications