Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அசரடித்த இஸ்லாமியர்கள்.. இதுதான் எங்க தமிழகம்! நாட்டிற்கே உதாரணமாய் மாறிய சித்திரை திருவிழா.. வாவ்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கியுள்ளார். இந்த காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மோர், ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்களை வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பண்பாட்டு தலைநகரமாய் விளங்கும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு எப்போதும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. மற்ற திருவிழாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் பங்கேற்பார்கள். ஆனால் இந்த திருவிழா சைவ-வைணவ விழாவாக இருந்தாலும் கூட தமிழ் பண்பாட்டின் மீது காதல் கொண்டிருக்கும் அனைவருக்கும் இதில் பங்கேற்கிறார்கள். எனவே இந்த திருவிழா அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. அதேபோலதான் தமிழ் இஸ்லாமியர்களும் இதனை தங்களது திருவிழாபோல கொண்டாடி வருகிறார்கள்.

Muslims who helped Hindus by providing refreshments at Madurai Chitra festival

22 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் உச்சக்கட்டம் என்றால் அது அழகர் வைகையில் இறங்கும் நிகழ்வுதான். தமிழ்நாடு முழுக்க இருந்து இதனை காண குவியும் பக்தர்களால் மதுரையே குலுங்கும். தொடக்கத்தில் மீனாட்சி கல்யாணம், அழகர் ஊர்வலம் என தனித்தனியாக இருந்த விழாக்களை திருமலை நாயக்கர் தனது ஆட்சியில் மாற்றியமைத்திருக்கிறார். இதனையடுத்து அழகர் கள்ளர் வேடமிட்டு மதுரை நகருக்குள் வருகிறார். அழகர் வைணவ சமயத்தின் தெய்வமாகவும், மீனாட்சி சைவ சமயத்தின் தெய்வமாகவும் இருக்கும் நிலையில் அக்காலத்தில் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயும் அடிக்கடி பிரச்னைகள் எழுந்தன.

எனவே இந்த பிரச்னைகளுக்கு முடிவுகாணும் வகையில் திருமலை நாயக்கர் இரு திருவிழாக்களையும் இணைத்து நடத்தினால் பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று யோசித்திருப்பார். இதனையடுத்துதான் இரண்டு திருவிழாக்களும் ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டுள்ளது என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் தனது ஆய்வில் அறிந்து கூறியுள்ளார். திருவிழாவின்படி தங்கை மீனாட்சிக்கு திருமணம் நடக்கும் திருமணத்தை காண சீர் வரிசைகளுடன் அழகர் கள்ளர் வேடமிட்டு நகருக்கு வருவார். ஆனால் திருமணம் முன்னரே முடிந்துவிட்டிருக்கும். எனவே கோபம் கொண்ட அவர் வைகையில் எழுந்தருளி நீராட்டிவிட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்புவார்.

Muslims who helped Hindus by providing refreshments at Madurai Chitra festival

இதில் மேற்குறிப்பிட்டதை போல வைகையில் அவர் எழுந்தருளும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகையில் பக்தர்களுக்கு அருள்பாளித்துள்ளார். இதில் ஒவ்வொரு நிற பட்டுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கிறது. வழக்கமாக அழகர் பச்சை பட்டுடுத்திதான் வருவார். இவ்வாறு பச்ச பட்டை உடுத்தியிருந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல மஞ்சள் பட்டு உடுத்தியிருந்தால் அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வு ஏதும் நடக்கும். இது தவிர வெள்ளை அல்லது நீல நிறத்தில் பட்டுடுத்தி வந்தால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது தற்போதைய நிலையே நீடிக்கும். இறுதியாக இருப்பது சிவப்பு. அழகர் சிவப்பு நிறத்தில் பட்டுடுத்தியிருந்தால் அந்த ஆண்டு பேரழிவு ஏற்படும். குறிப்பாக வேளாண் தொழில் கடுமையாக பாதிக்கும் என்று அர்த்தம்.

இவ்வளவு பண்பாட்டு பாரம்பரியமிக்க இந்த திருவிழாவில் இஸ்லாமியர்களும் தங்களை இணைத்துக்கொண்டு அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாது வரும் பக்தர்களின் பசி, தாகத்தை சமாதானம் செய்ய ஆங்காங்கே தண்ணீர் பந்தல்களை வைத்து விநியோகித்து வருகின்றனர். இது திருவிழாவில் பங்கேற்ற அனைவரிடையேயும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு வலுவான மதநல்லிணக்கம் கொண்ட மாநிலம் என்பது மீண்டும் ஒரு முறை பறைசாற்றப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+