நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா? திமுக நாடகம்.. ‘இவர்களால் மட்டுமே முடியும்! அதிமுக சரவணன் பளீர்
மதுரை: நீட் தேர்வு விலக்கு கோரி இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்ற நிலையில், நீட் விலக்குக்காக சட்டப் போராட்டம் தொய்வின்றி தொடரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம் என அதிமுக மருத்துவரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
நீட் தேர்வு பயம் காரணமாக தமிழகத்தில் சில மாணவ மாணவிகள் தவறான முடிவு எடுத்துவரும் நிலையில், நீட் விலக்கு கோர வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து இருக்கிறது. இந்த நிலையில் நீட் விலக்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் அதிமுக பாஜக பங்கேற்காத நிலையில் திமுக, பாமக, சிபிஎம், சிபிஐ, காங்கிரஸ் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், தவாக, மமக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில், திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது, உச்ச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என மதுரை டாக்டர் சரவணன் கூறியுள்ளார். மதுரையில் அதிமுக மருத்துவரணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் "நீட் தேர்வு ரத்து தொடர்பாக திமுக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மக்களிடம் நாடகமாடி உள்ளது. 2010 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடி நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற்றார்.எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், வருடத்திற்கு 600 மருத்துவ மாணவர்கள் அரசு செலவில் மருத்துவம் படித்தனர். 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வரப்பட்டதால் 1,650 மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலக் கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனும் வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. தேர்தல் நெருங்குவதால் முதலமைச்சர் நீட் தேர்வு நாடகத்தை நடத்துகிறார். நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக பொதுமக்களிடம் 50 லட்சம் கையெழுத்து பெற்றது அதன் நிலை என்னவென்று தெரியவில்லை.
உச்சநீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும். திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக போல பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டோம். ஒருபுறம் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதே நேரத்தில் நீட் தேர்விற்காக மாணவர்களை சிறப்பு பயிற்சிகள் மூலம் தயார்படுத்துவோம். நீட் தேர்வை எதிர்கொள்வதற்காக மாணவர்களை தயார்படுத்தும் முயற்சியிலிருந்து திமுக அரசு விலகி விட்டது" என கூறினார்.
-
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே?












Click it and Unblock the Notifications