திடீரென வெடித்த டயர்.. பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் ஆதரவாளர் கார் விபத்து.. போலீஸ் காயம்! பரபர!
மதுரை : தேவர் குருபூஜைக்கு பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் காயமடைந்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் பிரமுகர்கள் பசும்பொன் நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்பதற்காக பசும்பொன் வந்து கொண்டிருந்த நிலையில், கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

பசும்பொன் நோக்கி படையெடுப்பு
முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் படையெடுத்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில், அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் பசும்பொன்னிற்கு வந்து மரியாதை செய்தனர்.

பெருந்திரளோடு ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனியில் இருந்து பெருந்திரளாக பசும்பொன் நோக்கி வந்தார். வழிநெடுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓபிஎஸ், திறந்த வாகனத்தில் மேலே ஏறி நின்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றார். ஓபிஎஸ் பசும்பொன்னிற்குள் நுழையும்போது தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான கார்களில் வந்துள்ள அவரது ஆதரவாளர்களும் திரண்டனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் டயர்
முன்னதாக, தேவர் குருபூஜைக்காக பசும்பொன்னுக்கு வரும் வழியில் பார்த்திபனூர் சோதனைச்சாவடி அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவரின் கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் டயர் வெடித்து ஏடிஎஸ்பி சுகுமாறன் வாகனத்தின் மீது மோதியதில், ஏடிஎஸ்பி சுகுமாறனின் கார் சாலை தடுப்பில் மோதி அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மீது மோதியது.

காவலர் காயம்
இந்த விபத்தில் காவலர் முஜிபுர் ரஹ்மான் காயமடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பசும்பொன் செல்லும் வழியில் ஓபிஎஸ் ஆதரவாளரின் கார் டயர் வெடித்த விபத்தில் போலீஸ் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாஜிக்கள் கார் விபத்து
முன்னதாக, பசும்பொன் நோக்கி வந்துகொண்டிருந்தபோது மானாமதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு 5 பேர் காயமடைந்தனர். தேவர் ஜெயந்திக்கு ஈபிஎஸ் ஆதரவாளர்களான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், பாஸ்கரன் உள்ளிட்டோர் சென்று கொண்டிருந்தபோது மானாமதுரை அருகே குறுக்கே திடீரென கார் ஒன்று வந்ததால் முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் போட்டுள்ளது.

ஒன்றிய செயலாளர் காயம்
இதனால், அடுத்தடுத்து வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இந்த விபத்தில் முன்னாள் அமைச்சர்களின் கார்கள் உட்பட 6 கார்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் திருவாருர் அதிமுக ஒன்றிய செயலாளர் பலத்த காயமுற்று, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications