7 பேர் விடுதலை..விடாத காங்! எம்டிஎம்ஆர் குழு என்னவானது?கிடுக்குப் பிடி போடும் பழ நெடுமாறன்! பின்னணி?
மதுரை : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்வதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட எம்எடிஎம்ஆர் குழு என்ன ஆனது என பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதைப் போல தங்களையும் விடுவிக்க வேண்டும் என நளினி உள்ளிட்ட ஆறு பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்த நிலையில் உச்சநீதிமன்றம் 6 பேரை விடுதலை செய்து தீர்ப்பு அளித்தது.
இதனைத் தொடந்து நேற்று நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

7 பேர் விடுதலை
30 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள நளினி உள்ளிட்டோர் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நளினி உள்ளிட்ட 6 பேர் தற்போது மீண்டும் விடுதலை செய்யப்பட்டுள்ளதை குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்த விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழ.நெடுமாறன்
இந்நிலையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட விசாரணை குழு என்ன ஆனது என பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மாவட்டம் மேலூரில் தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பில் மாணவர் மாநாடு நடைபெற்றது. இதில் வி.சி.க தவைவர் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

எம்.எடி.எம்.ஆர் குழு
விழா மேடையில் பழ.நெடுமாறன் பேசுகையில்," ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்களை எதிர்த்து காங்கிரஸ் மேல்முறையீடு செய்வதாக கூறுகின்றனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக 25 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட எம்.டி.எம்.ஆர் குழு என்னவானது. அது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போதும் இல்லாத போதும் அந்த குழுவின் செயல்பாடு என்ன? இலங்கை நாடு தற்போது இந்தியாவின் பகைமை நாடுகளுடான சீனா, பாகிஸ்தானுடன் நட்புறவை வளர்த்து வருகின்றது. அதனை இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் கவனித்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என பேசினார்.

பழ.கருப்பையா
இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா," ராஜீவ் காந்தி கொலை என்பது கொடூரமானது. இந்த வழக்கில் 31 வருடங்களுக்கு பிறகு சில பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இளமையில் சென்று அவர்கள் முதுமையில் வெளியே வந்துள்ளனர். விடுதலையை எதிர்ப்பது என்பதை காங்கிரஸ் சொல்வது அவர்களின் தலைமை விசுவாசம். இதனை மத்திய அரசு தவறு என உச்சநீதிமன்றம் செல்கின்றனர்.

மத்திய அரசு
இதற்கு அவர்கள் தூக்கிலே போட்டுருக்கலாமே. இவ்வளவு ஆத்திரம் ஏன். நியாயமா என கேட்கிறேன். ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றபோது தருமபுரியில் மாணவிகள் வந்த பேருந்தை மறித்து அக்கட்சியினர் கொளுத்தினார்கள் .ஆனால் எடப்பாடி அரசில் அவர்கள் 10 வருடங்களில் விடுதலை செய்யப்பட்டனர். ராஜபக்சே இலங்கை மண்ணில் வாழ முடியாமல் விரட்டிக்கப்பட்டார் என்றால் அவர் செய்ததற்கு அனுபவிக்கின்றார்" என்றார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications