தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு எந்த முகத்துடன் மோடி இங்கு வந்திருக்கிறார்.. டைமிங்கில் விளாசிய ஸ்டாலின்
மதுரை: தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு இப்போது எந்த முகத்துடன் பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்? என்று மதுரையில் பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலின் மோடியை விமர்சித்து பேசினார்.
மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:- நீதி தவறிய மன்னனை கண்ணகி கேள்வி கேட்ட மதுரை மண்ணுக்கு வந்துள்ளேன். தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார். மராட்டியத்தில் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கவிழ்த்துவிட்டு அந்த மாநிலத்தையே நாசமாக்கி விட்டார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டும் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுப்பது தான் மோடியின் ஆட்சி. பிரதமர் மோடிக்கு ஊழலை ஒழிக்கும் எண்ணம் இல்லை.
பெண் சக்தி குறித்து மோடி பேசி வருகிறார். டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கண்ணீர் விட்ட போது மோடி எங்கே போனார்?.. குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானோ வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்தது பாஜக அரசு.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்ப்பவர் தான் மோடி. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக அநீதி நடக்கும் போது பிரதமர் மோடி வேடிக்கை பார்த்தார். ஒரு முறையாவது மணிப்பூர் சென்று அங்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் கூறினாரா?...
பிரதமர் மோடியை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது ஜூன் 4 ஆம் தேதி தெரியும். தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட பல திட்டங்களை முடக்கி போட்டவர் தான் பிரதமர் மோடி. இதுவரை தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன என்று மோடியால் பட்டியல் போட்டு சொல்ல முடியுமா?.. தமிழ்நாட்டு மக்கள் மீது ஏன் உங்களுக்கு வன்மம்.
தமிழ்நாடு மக்கள் மீது ஏன் உங்களுக்கு ஓரவஞ்சனை?... பேரிடர் நிதி கூட கொடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி வழங்க உங்களிடம் கேட்டால் அதை கூட பிச்சை என கொச்சைப்படுத்துகிறார் நிர்மலா சீதாராமன். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு இப்போது எந்த முகத்துடன் பிரதமர் மோடி இங்கு வந்திருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்திருக்கிறார்?... பாஜக அரசு நம் நாட்டை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது. பெட்ரோல் டீசல் விலையை ஒரே அடியாக உயர்த்திவிட்டார். தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக, தமிழ்நாட்டை பாழ்படுத்திய அதிமுக இரண்டையும் ஒருசேர வீழ்த்த வேண்டும். பாஜகவுக்கு அளிக்கிற வாக்கு தமிழ்நாடு எதிரிகளுக்கு அளிக்கின்ற வாக்கு. அதிமுகவிற்கு அளிக்கின்ற வாக்கு துரோகிகளுக்கு அளிக்கின்ற வாக்கு. எனவே திமுக, திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு அளியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications