தலித்துகள் அவமதிப்பு.. பாலியல் புகார்.. மர்ம மரணங்கள்! பேராயர் அந்தோணிசாமி மீது பகீர் புகார்
மதுரை: கத்தோலிக்க திருச்சபையில் சாதி பிரச்சனையை வளர்த்து வரும் மதுரை மறைமாவட்ட பேராயர் அந்தோணி சாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து கிறிஸ்தவ மக்கள் களம் தலைவர் செபாஸ்டின் சூசைராஜ் கூடல்புதூர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அவர் தனது மனுவில், "மதுரை கத்தோலிக்க பேராயரும் முன்னாள் ஆயர் பேரவை தலைவருமான அந்தோணிசாமி சாதி பாகுபாடுகளை ஊக்குவிக்கும் வகையில் கத்தோலிக்க திருச்சபையில் நடந்து வருகிறார்.
மேலும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் சாதி ரீதியாக உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நோக்கில் செயல்பட்டு சட்டத்திற்கும், சமூகத்திற்கும் முரணாக சாதியை வளர்த்து வருகிறார்.

தலித்துகளுக்கு தனி கல்லறை
ஒன்றிய அரசு அங்கீகாரம் அளிக்காத தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி, எஸ்டி என சாதி ரீதியாக முத்திரை குத்தி செயல்படுவது சரியாக இல்லை. 18 மாவட்டங்களில் ஒரு தலித் கிறிஸ்தவர் தவிர வேறு யாரையும் ஆயராக வருவதற்கு அனுமதிப்பது இல்லை. தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி கல்லறை என்று சுவர் எழுப்பி சாதி வெறியை தூண்டுகிறார்.

குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே பேராயர்
சிவகங்கை மாவட்டத்தில் செயலர் சூசை மாணிக்கம் தனது சாதி பிரிவினரை மட்டுமே சிவகங்கை பேராயராக நியமிக்க வேண்டும் என பகிரங்கமாக சாதியை குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார். ஒரு வார இதழில் பேராயர் அந்தோணிசாமி மீதான பாலியல் புகார்கள் செய்தியாக வெளியிடப்பட்டு உள்ளன.

மாணவிகள் மர்ம மரணம்
பாலியல் பிரச்சனைகள் குறித்தும் மாணவிகள் மர்ம மரணம் குறித்தும் வெளியான செய்திக்கு பேராயர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது தான் செய்தது உண்மைதான் என்று மௌனம் காப்பது போல் உள்ளது. எனவே மாவட்ட காவல் ஆணையர் இது குறித்து விசாரித்து கிறிஸ்தவத்தில் சாதி ரீதியான உணர்வுகளை தூண்டி சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க காரணமாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் ஒருவரை பெண்கள் சந்திக்க பயப்படும் வகையில் சமூக பெண்களுக்கு மன உளைச்சலையும், பயத்தையும் ஏற்படுத்தி கிறிஸ்தவர்களை இழிவுபடுத்தி வரும் முன்னாள் ஆயர் பேரவை தலைவர், மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications